பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 11 நாயினேன் உனை நினையவும் மாட்டேன் நமச்சிவாய என்று உன் அடி பணியாப் பேயன் ஆகிலும் பெரு நெறி காட்டாய் பிறை குலாம் சடைப் பிஞ்ளுகனே ஒ சேயன் ஆகி நின்று அலறுவது அழகோ திருப்பெருந்துறை மேவிய சிவனே 7 இறைவனுடைய படைப்பில் உயர்ந்து நிற்பதாகச் சொல்லிக்கொள்ளும் மானிடப் பிறப்பிற்குச் சிறப்பாக உள்ளவை மனம், மொழி, மெய் என்ற மூன்றுமாகும். இவை மிக நுண்மையிலிருந்து மனம்) வளர்ந்து சென்று பருமை நிலையை (மெய்) அடைவதாகும். இந்த மூன்றையும் ஒருநிலைப்படுத்தி ஒன்றையே சிந்திக்குமாறு செய்வதே பிறவியின் பயனை அடைவதற் குள்ள ஒரே வழியாகும். அடிகளார் போன்றவர்கள் இருபத்து நான்கு மணி நேரமும் மனம், மொழி, மெய் என்பவற்றால் இறைவனிடமே தோய்ந்திருப்பினும், அது இல்லை என்று கூறிக்கொள்வதே அவர்கள் இலக்கணமாகும். ‘சாகவேண்டும், சாவதற்கு ஒரு வழிகாட்டாய் என்று முந்தைய பாடல்களில் கூறிக்கொண்டுவந்தவர், ஏன் சாகவேண்டும் என்பதற்குரிய காரணத்தை இப்பாடலில் விரிவாக விளக்குகிறார். அவன் தந்தவை மனம், மொழி, மெய் என்ற மூன்றுமாம். ஆனால், இந்த மூன்றும் அவன் கட்டளைப்படி பணி புரியவில்லை. உனை நினையவும் மாட்டேன்’ என்பதால் மனம் பணி செய்ய மறுக்கின்றது என்பதைக் கூறினார். 'நமச்சிவாய' என்று ஒதாததால் மொழித் தொண்டு நடைபெறவில்லை என்று கூறினார். ‘அடி