பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பணியாப் பேயன்’ என்பதால் மெய்த் தொண்டும் நடைபெறவில்லை என்று கூறினார். - இம்மூன்றும் தறிகெட்டுப்போனதால் தம்மைப் பேயன்’ என்று கூறிக்கொள்கிறார். இறைவன் மனம், மொழி, மெய், என்ற மூன்றைத் தந்து உய்யும் வழியையும் காட்டினான். அந்த மூன்றும் தறிகெட்டுப் போனமையால் பேயனாகிவிட்டாலும் தாம் உய்யும் பெருநெறி காட்டித் தம்மை அழைத்துக்கொள்ள வேண்டியது அவன் கடமை என்பதையும் பேசுகிறார். இனி, இவ்வளவு முறையிட்டும் அவன் இரங்கி, அருள் செய்தபாடில்லை. ஆதலால் பெரியவர்களுக்குரிய இலக்கணம் அத்தலைவனிடம் ஓரளவு குறைகிறது என்பதைக் குறிப்பால் இப்பொழுது உணர்த்துகிறார். திருப்பெருந்துறை நிகழ்ச்சி மூன்று செயல்களை உள்ளடக்கியது. சேயராக தூரத்துதே நின்ற வாதவூரரைக் குருநாதர் அண்மைப்படுத்தினார், அமைச்சராக இருந்து ஒயாது பேசிக்கொண்டிருந்த ஒருவரை வாய்மூடி மெளனியாக்கினார். வாதவூரர் மணிவாசகராக மாறியதைக் கண்டவர்கள், அழகிது என்று முன்பு பாராட்டினர். இப்பொழுது மூன்றும் மாறிவிட்டன. அண்மையில் இருந்த மணிவாசகர் சேயராகிவிட்டார். வாய் மூடி இருந்தவர் தெருவுதோறும் அலறத் தொடங்கிவிட்டார். இந்நிலையில் முந்தையோர் அழகிது என்று கூறிய சொற்கள் அவரது நினைவுக்கு வருகின்றன. அதே சொல்லை இப்பொழுது திருப்பி, என்னைச் சேயனாக்கித் தெருவுதோறும் அல்றவிடுவது அழகோ உனக்கு? என்கிறார். 405. போது ಕ್ அயன் பொரு கடல் கிடந்தோன் புரந்தர ஆதிகள் நிற்க மற்று என்னைக்