பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்திலாப் பத்து 13 கோது மாட்டி நின் குரை கழல் காட்டிக் - குறிக்கொள்க என்று நின் தொண்டரில் கூட்டாய் யாது செய்வது என்று இருந்தனன் மருந்தே அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ சீத வார் புனல் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே 8 இப்பாடலை நன்கு புரிந்துகொள்வதற்குப் பின்வருமாறு கொண்டுகூட்டுச் செய்துகொள்வது நலம். புராந்தராதிகள் நிற்க என்னைக் கோதும் ஆட்டி, குரைகழல் காட்டி, குறிக்கொள் என்று (ஆணையிட்டாய்) யாது செய்வது என்று தெரியாமல்) இருந்தனன் மருந்தே! அடியேன் இடர்ப்படுவதும் இனிதோ? இதனைப் போக்கத் தொண்டரில் கூட்டாய் என்றவாறு? மனித மனத்திற்கு ஒரு விநோதமான இயல்பு உண்டு. பல நாள் விரும்பி, தேடி, அரிதிற் கிடைத்த பொருளா யினும், கிடைத்தவுடன் அதிலுள்ள ஆர்வம் குறையத் தொடங்கிவிடும். எளிதாக ஒரு பொருள் கிடைக்குமாயின் அதிலுள்ள ஆர்வம் மிக விரைவில் குறைந்துவிடும். ஆனால், அப்பொருள் கைவிட்டுப் போனவுடன் மறுபடியும் அதை நினைந்து, அது மீட்டும் கிட்டவேண்டும் என்று வருந்துவ தும் மனித மனந்தான். இக்கருத்தை மனத்தில் கொண்டு மேலேயுள்ள பாடலைப் பார்த்தால், அடிகளார் கூற்றை நன்கு புரிந்துகொள்ள முடியும். திருப்பெருந்துறை அனு பவம் எளிதாகக் கிடைத்தமையின் அடிகளார் நாட்டம் அதில் முழுவதுமாகச் செல்லவில்லைபோலும். அது மறைந்தபின் அதற்காகப் பெரிதும் வருந்துகிறார் அடிகளார். அயனும் மாலும் அறியமுடியாதவன் எளிதாக வெளிப்பட்டான்; காட்சி தந்தான்; திருவடி தீட்சை செய்தான்; அடியார் கூட்டத்திடை அமர வைத்தான்.