பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 திருவடியைக் கண்டுகொண்டிருக்கும்போதே குரு அடியார் கூட்டத்துடன் மறைந்துவிட்டார். கிடைத்தற்கரிய இந்தப் பேறு மறுபடியும் கிட்ட வேண்டும் என்று அடிகளார் நினைத்ததில் வியப்பொன்றும் இல்லை. ஆனால், அது கிட்டவில்லை. 'பொதுவினில் வருக என்று ஆணையிட்டார் குரு நாதர்; அதன்படியே தில்லை வந்துசேர்ந்தார் அடிகளார். ஆனால், குருநாதரோ அடியார்கூட்டமோ தரிசனம் தர வில்லை. கோயில் மூத்த திருப்பதிகத்தில் இதனையே சொல்லி வருந்துகிறார். இப்பொழுதும் அதையே நினைந்து வருந்துகிறார். - தில்லை வருகின்றவரையில், தில்லையை அடைந்த வுடன் தம் எண்ணம் நிறைவேறும் என்று கருதினார். ஆனால், அது நிறைவேறவில்லை. அது நிறைவேறாதபோது எல்லையற்ற ஏமாற்றம் ஏற்பட்டது. ஆகவேதான், 'யாது செய்வது என்று இருந்தனன், அடியேன் இடர்ப்படுவதும் இனிதோ?’ என்று வருந்திக் கேட்கும் நிலை உருவானது. குரை கழல் காட்டிக் குறிக்கொள்க’ என்பது காட்டப் பெற்ற திருவடியையே பற்றுக்கோடாகவும் குறிக்கோளாக வும் கொள்க என்ற பொருளைத் தந்துநிற்கிறது. 406, ஞாலம் இந்திரன் நான்முகன் வானோர் நிற்க மற்று ஏனை நயந்து இனிது ஆண்டாய் காலன் ஆர் உயிர் கொண்ட பூம் கழலாய் ಹ6 历 - அங்கி s 编 * மாலும் ஒலம் இட்டு அலறும் அம் மலர்க்கே மரக்கணேனையும் வந்திடப் பணியாய் சேலும் நீலமும் நிலவிய வயல் சூழ் திருப்பெருந்துறை மேவிய சிவனே - 9