பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்தப் பாடல் தோன்றுகின்ற நிலை, சஞ்சிதம், பிராரத்துவம் என்ற இரண்டு வினைகளும் எரிக்கப்பெற்று, ஆகாமிய வினையும் வளர முடியாத நிலையாகும். இக்கருத்தையே திருமூலர், . தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்சென்னியில் வைத்த சிவனருளாலே (திருமந்திரம் 2550) என்ற பாடலில் விளக்கமாகக் கூறியுள்ளார். இங்குப் 'பின்னை வினையை' என்று சொல்லப்பட்டது ஆகாமியத்தையாம். அடிகளாரைப் பொறுத்தமட்டில் இரண்டாம் முறையாகத், திருக்கழுக்குன்றத்தில் குருதரிசனம் கிடைத்ததற்குரிய காரணத்தைப் பாடலின் பின்னிரண்டு அடிகளில் விளக்குகின்றார். உலர்த்தப்படாத ஈரமாகவுள்ள ஒரு விதை முளைப்புத் திறனில் பெரும்பகுதியை இழந்துவிடும். அதேபோல, சஞ்சிதம், பிராரத்துவம் என்ற இரண்டு வினைகளையும் திருவடி தீட்சையின் மூலம் எரிக்கப்பெற்ற மணிவாசகருக்கு இவ்வுலகிடை மேலும் வாழ்கின்ற காரணத்தால் ஆகாமிய வினை சேர்ந்துகொண்டிருக்கும் அல்லவா? இந்த ஆகாமிய வினை(வித்து மேலும் பிறவியைத் தரக்கூடும் அல்லவா? அப்படித் தராமல் இருக்கவேண்டுமேயானால் இந்த வித்து உலராமல் நனைந்தே இருக்கவேண்டும். - அடிகளாரின் ஆகாமிய வினையாகிய வித்து இறையனுபவம், இறை உணர்வு என்ற நன்னிரால் ஓயாது நனைக்கப்படுதலின் இது மற்றொரு பிறவியை விளைக்காது. எனவே, மூவகை வினைகளும் (சஞ்சிதம், பிராரத்துவம், ஆகாமியம்) அற்ற நிலையில் அன்பு பிழம்பாகத் திரியும்