பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வந்தியிடம், வேலை செய்கிறேன்’ என்று பிட்டினை வாங்கி உண்டானல்லவா? உண்ட பிட்டின் அளவிற்கு மண்ணைச் சுமந்தான். ஆக, வாங்கி உண்ட பிட்டின் அளவிற்கு உள்ள பணி, இவன் சுமந்த அளவோடு முடிந்துவிட்டது. அதனையே 'பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறையான்' என்றார். ஆனால், பித்தன்' என்று சொல்லவேண்டிய காரணம் என்ன? சுமக்கின்ற அளவோடு அவன் கூலி முடிந்துவிட்டாலும் எடுத்த மண்ணை என்ன செய்தான்? கரை அடைக்கப் பயன்படுத்தாமல் ஆற்று வெள்ளத்துள் கொட்டினான். ஆதலின் இது பித்தர் செயல் என்பார் 'பித்தனே' என்றார். திருவடியைக் கண்டபொழுது, செவ்விய முறையில் அத்திருவடிக்கண் வந்து அடைக்கலம் புகாமல், தாம் போலியாகத் திருவடியில் வீழ்ந்ததாக அவர் நினைக்கிறார். இதனாலேயே நேர்பட வந்திலாத சழக்கனேன் (பொய்யன்) என்று கூறுகிறார். நாயைவிடக் கீழ்ப்பட்டவனும், கொடிய துன்பத்தை அனுபவிப்பவனும் வெங்கட்டன்) ஆகிய தம்மையும் ஒரு பொருளாக்கிக், கழுக்குன்றில் குருநாதர் வடிவைக் காட்டினான் என்கிறார். 470. மலங்கினேன் கண்ணின் நீரை மாற்றி மலம் கெடுத்த பெருந்துறை விலங்கினேன் வினைக்கேடனேன் இனி மேல் விளைவது அறிந்திலேன் இலங்குகின்ற நின் சேவடிகள் இரண்டும் வைப்பிடம் இன்றியே கலங்கினேன் கலங்காமலே வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 3