பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 125 இப்பாடலில் திருப்பெருந்துறை நிகழ்ச்சியை மறுபடியும் நினைவுகூர்கிறார். ஒரே விநாடியில் தம்மைத் தனியே விட்டுவிட்டு அடியார்களோடு குருநாதர் மறைந்துவிட்டார். அவ்வாறு மறைவதற்கு முன்னர்க், குருநாதர் தம் திருவடியை வைப்பதற்கு அடிகளாரின் தலை இடமாக அமைந்தது. அந்தத் திருவடி சம்பந்தம் பெறுமுன்னர்த் திருவாதவூரர் அஞ்ஞானமாகிய மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். இனி என்னே உய்யுமாறு’ என்று அஞ்சியதால் அவர் கண்ணிர் பெருகிற்று. பெருந்துறை நாயகன் வாதவூரரின் கண்ணிரை மாற்றி, அவருடைய மயக்கத்தைத் தெளிவித்து, ஒரே விநாடியில் அவருடைய மலங்களைச் சுட்டெரித்தான் என்கிறார். அவ்வளவு செய்தும் வினைவலையில் அகப்பட்டவரும் மேலே என்ன செய்வது என்று அறியாதவருமாகிய அவர், அடியார் கூட்டத்தோடு உடன் செல்லாமல் விலகி (விலங்கினேன்) நின்றுவிட்டார். - குருநாதர் மறைந்தபிறகு அடிகளார் செய்வதறியாது திகைக்கின்றார். இந்த நிலையில் புதியதொரு கலக்கம் அவரை ஆட்கொள்கிறது. திருப்பெருந்துறையில் குருநாதர், திருவடியை வைப்பதற்கு அடிகளாருடைய தலை மிகப் பொருத்தமான ஆசனப்பலகையாக இருந்தது. ஆனால், இப்பொழுது குருநாதரிடமிருந்து இவர் விலகிவிட்டதால், குருநாதரின் திருவடிகளைத் தாங்கும் பேறு தம் தலைக்கு இல்லாமல் போய்விட்டதே என்று கருதிக் கலங்கினேன்’ என்கிறார். - அவ்வாறு கலங்கியிருந்த அவரை, 'கலங்கத் தேவையில்லை, திருவடி வைப்பதற்கு வேறு இடமுமுண்டு’