பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இரண்டையும் கடந்து நிற்கும் கால தத்துவத்தைக் கூறினார். சலித்துக் கொண்டேயிருந்தாலும் தில்லைக் கூத்தனுக்கு ஆடல் வடிவம் பேசப்பெறுகிறது அல்லவா? குணம், குறி, நாம, ரூபம் ஆகிய அனைத்தையும் கடந்து நிற்கும் அப்பொருள், வடிவு கடந்தது என்பதை அறிவிக்கவே கால தத்துவத்தைக் கூறினார். நிலைபெறாது சலித்துக் கொண்டேயிருத்தல் கூத்தனுக்கும் கால தத்துவத்திற்கும் பொதுத்தன்மையாகும். அந்த வடிவத்தையும் விட்டு ஒயாது சலித்துக்கொண்டே யிருக்கும் ஒரே தன்மை கால தத்துவத்திற்கு மட்டுமே உரியது. இந்த நுண்மையான கருத்துக்களையெல்லாம் அடக்கிக் காலமே' என்றார். கால தத்துவமாக இருக்கின்ற அவனை விடாது ஒதிக்கொண்டிருக்க அந்தக் கால தத்துவம் நிகழ்காலத் தத்துவமாய்க் குருநாதர் என்ற பருவடிவை மேற்கொண்டு, பெருந்துறையிலும் கழுக்குன்றிலும் காட்சி தந்தது என்கிறார் அடிகளார். 473. பேதம் இல்லது ஒர் கற்பு அளித்த பெருந்துறைப் பெரு வெள்ளமே ஏதமே பல பேச நீ எனை ஏதிலார் முனம் என் செய்தாய் சாதல் சாதல் பொல்லாமை அற்ற தனிச் சரண் சரண் ஆம் எனக் காதலால் உனை ஒத நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே 6 இப்பாடலின் முதலடி மிக நுணுக்கமான ஒரு கருத்தை வெளியிடுகிறது. கற்பு என்பது கல்வி என்ற பொருளைத் தரும். கல்வி சாதாரணமாகத் தொடங்கி, ஆழமாகச் செல்லச் செல்லப் பொருள்களின் இடையே உள்ள வேறுபாடுபற்றிய அறிவு விரிந்துகொண்டே செல்லும். கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மாக்கல், கருங்கல்,