பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கழுக்குன்றப் பதிகம் 131 கூழாங்கல் முதலிய கற்கள் அனைத்தும் கல் என்ற ஒரே பெயரில் அடங்கும். ஆனால், கல்வியறிவு மிக மிக, இந்த மூன்று தொகுப்பினுள் அடங்கும் கற்களில், முப்பதுக்கும் மேற்பட்ட உள்வேறுபாடுடைய பல கற்கள் இப்பொதுப் பெயரில் அடங்கும் என்பதை அறியமுடியும். இதன் எதிராகச் சிவஞானம் அல்லது அருள்ஞானம் என்ற கல்வியைப் பெறுபவர் உலகத்தில் உள்ள பொருள்களை வேறுபிரித்துக் காண்பதில்லை. அவர்கள் பார்வையில் பிரபஞ்சத்தில் காணப்படும் பல்லாயிரக்கணக்கான பொருள்களும் இறைவன் என்ற ஒரே பொருளின் பல்வேறு வடிவங்கள் என்றே காட்சியளிக்கும். இதனையே தாயுமானவப் பெருந்தகை பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே தாயுமான: பரிபூரணானந்தம்) என்று பாடியுள்ளார். வேறுபாட்டை அதிகப்படுத்தி அந்த வேறுபாட்டை அறியுமாறு செய்வது அl.lர ஞானக் கல்வி. இதன் எதிராக, புற வேறுபாட்டினிடையே உள்ள அக ஒருமைப்பாட்டைக் காணுமாறு செய்வது பரஞானக் கல்வி இக்கல்வியைப் பெருந்துறை நாயகன் தமக்கு அளித்தான் என்பதைப் பேதம் இல்லதொர் கற்பளித்த பெருந்துறைப் பெருவெள்ளமே என்கிறார். வேறுபாட்டைப் போக்கும் அந்த சிவஞானத்தைத் தந்தவரை எத்தனையோ சொற்களால் கூறலாமேனும் பெருவெள்ளமே என்று அடிகளார் கறுவது சிந்தனைக்குரியதாகும். பெரு வெள்ளத்தில் எத்தகைய வேறுபாடும் தெரிவதில்லை. இரண்டாவது அடி ஒரு துண்மையான பொருளைக் குறிக்கிறது. இவ்வடியைப் பின்வருமாறு கொண்டு கூட்டுக. 'ஏதிலார் ஏதமே பல பேச நீ முனம் எனை என் செய்தாய் இவ்வரியிலுள்ள முனம்' என்ற சொல் இப்பாடல் பாடுதற்குச் சில காலம் முன்னர் நிகழ்ந்த திருப்பெருந்துறை நிகழ்ச்சியைக் குறிக்கின்றது.