பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 137 கரணங்கள் பசுத்தன்மையினின்று நீங்கிப் பதி கரணங்களாகவும் மாறின. - அடுத்துத் திருவடி சம்பந்தம் கிடைத்ததால், பதி கரணங்களோடு கூடிய ஒரு புதிய மனிதர் மணிவாசகர் என்ற பெயரில் உதயமானார். புதிதாகத் தோன்றிய மணிவாசகர் யார்? அதற்கு விடையை அவரே கூறுகிறார். 'தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை’ (திருவாச:397) என்று அவரே கூறியுள்ளதால், புதிதாகத் தோன்றிய மணிவாசகர் என்ற மனிதரில் பழைய திருவாதவூரருக்குரிய இயல்புகள் எதுவும் இல்லாமல் சிவமாகவே மாறிவிட்ட நிலை பேசப்பெறுகிறது. இந்த அருங்கருத்தையே 'சிவமாக்கி எனை ஆண்ட' என்று பாடுகிறார். பழைய திருவாதவூரருக்கும் புதிய மணிவாசகருக்கும் பொதுத்தன்மை ஏதேனும் உண்டா என்று சிந்தித்தால், ஒர் உண்மை விளங்கும். கருவி கரணங்களுக்கு இடமாகிய இந்த உடம்பு இருவருக்கும் ஒன்றேதான். அதுதவிரப் பழைய பொறி, புலன்களுக்கும் புதிய பொறி புலன்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. பழையவை பசு கரணங்கள், புதியவை பதி கரணங்கள். இது எப்படித் தெரிகிறது? பழைய கருவி கரணங்களோடு கூடிய திருவாதவூரர் இந்திரியவயம் மயங்கி, அருநரகை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். திருப்பெருந்துறையில் குருநாதர் அவரை இடைமறித்து அவருடைய கருவி கரணங்களையெல்லாம் மாற்றி, ஆண்டு, சிவமாகவே ஆக்கிவிட்டார். புதிதாகத் தோன்றிய மணிவாசகருக்குப் புதிதாகக் கிடைத்தவை பதி கரணங்கள் ஆதலால் பசுகரணங்கள் காணுகின்ற நடராஜ விக்கிரகத்திற்குப் பதிலாகத் தில்லைக் கூத்தனை ஆனந்த வடிவினனாக உணரும் வாய்ப்புக் கிடைத்தது. தி.சி.சி.1y 10