பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஒரு விநாடி நேரம் பின்னோக்கிப் பார்க்கும்போது உருத்தெரியாக் காலத்திலேயே தில்லைக்கூத்தன் உள்புகுந்தான்; உளத்தில் மன்னினான்; கருணையினால் ஆண்டுகொண்டான் என்ற அந்தச் செயல்களும் செய்திகளும் அகமனத்தின் ஆழத்தில் காட்சி கொடுப்பதை மணிவாசகர் என்ற மனிதர் புறநிலையில் நின்று காணும் வாய்ப்பைப் பெறுகிறார். தளர்ந்த மனம் மீட்டும் தென்பு அடைகிறது; ஒடிந்த உள்ளம் வலுப்பெறுகிறது. பின்னோக்கிக் காணும் அந்தக் காட்சியில் நாவரசர் பெருமான் கூறியதுபோல 'வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி (திருமுறை:4-81-5) என்ற எண்ணம் வலுப்பெறுகிறது. ஒரு விநாடிநேரம் தோன்றிய இந்தப் பின்னோக்குக் காட்சி நீண்டிருக்குமேயானால் அதிலே மகிழ்ந்த மணிவாசகர் மேலும் திருவாசகம் பாடியிருக்க மாட்டார். திருவாசகம் என்னும் பால் சுரக்கவேண்டி, தில்லைக் கூத்தன் அடிகளாரின் இந்தப் பின்னோக்குக் காட்சியை உடனே பறித்துவிடுகிறான். - மணிவாசகர் பழைய மணிவாசகராக ஆகிவிடுகிறார்; ஆகவே, அடுத்த பாடல் வழக்கம்போல் கல்லாத புல்லறி வின் கடைப்பட்ட நாயேனை என்று தொடங்குகிறது. 'உருத்தெரியாக் காலத்தே' என்று தொடங்கும் பாடலுக்கும், கல்லாத புல்லறிவின்’ என்று தொடங்கும் பாடலுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை காணப்பெறுகிறது! திருப்பெருந்துறையில் ஒரு விநாடி நேரத்தில் திருவாதவூரர் மாணிக்கவாசகராக மாறினார். அந்த இறையனுபவ வெள்ளத்தில் அவர் தொடர்ந்து இருந்திருந்தால், உலகிற்குத் திருவாசகம் கிடைக்காது என்று கருதிய கூத்தன், அந்த அனுபவத்தைப் பிடுங்கிக்