பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 141 சென்ற அவரை இழுத்துப் பிடித்து அருள் செய்தார் என்றும், அதற்குக் காரணம் அவருடைய அருளேயேன்றி வேறெதுவுமில்லை என்றும்தான் நினைத்தும் கூறியும் வந்தோம். இந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் தான் இதுவரையில் பார்த்த பல திருவாசகப் பாடல்கள் நம்மை நடத்திச்சென்றன. தம்மைப்பற்றிய சில உண்மைகளை. இதுவரை அவரே காணாத L_Jöux . உண்மைகளை இப்பாடலில் பேசுகிறார். திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பின்னும் தம்மை ‘நாயினும் கடையேன்” என்றும் 'ஆள்வாரிலிமாடு” என்றும் பலப்பல இடங்களில் பேசிக்கொண்டுவந்த அடிகளார். திடீரென்று உருத்தெரியா என்று தொடங்கும் இப்பாடலில் தம்முடைய பழமைபற்றிப் பேசுவதும் வியப்பை அளிக்கின்றது. பழமையைத் திரும்பிப்பார்த்து நடந்ததை அப்படியே காணும் ஆற்றல் (hindsight) அடிகளாருக்குத் திடீரென்று தோன்றி மறைந்திருக்க வேண்டும். தோன்றிய அந்த ஆற்றல், நிலையாக நின்றிருந்தால் மேற்கொண்டு திருவாசகப் பாடல்களைப் பாடியிருக்க மாட்டார்; ஆனால், அத்தகைய சொற்களும் கருத்தும் மேலும் பல பாடல்களில் வருதலால் இதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. ஒருவேளை தமக்கு உய்கதியே இல்லை என்ற ஏக்கம் ஆழ்மனத்தின் அடித்தளத்தில் தோன்றியிருத்தல் கூடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இத்தகைய ஒரு மனப்பான்மை மேலும் வளர்ந்திருக்குமேயானால் மனத்தென்புடன் திருவாசகம் பாடியிருக்க முடியாது. எனவே, ஆழமான துயரம், மனச் சலனம் ஏற்படுகின்ற நேரத்தில் அந்த மனத்தைத் தூக்கி நிறுத்தத் தில்லைக் கூத்தன் கையாண்ட வழி இதுவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.