பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இருக்கும், உயிரணுக்களுக்கு உள்ளேயே உள்புகுந்தான் என்பதையே உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து என் உளம் மன்னி' என்றார். உள்ளே புகுந்தவன் முதன்முதலில் வடிவெடுக்கும் தலையினுள் தங்கினானா? அல்லது வேறு எங்கே தங்கினான்? என்ற வினாக்களுக்கு விடைகூறுவார் போல, வடிவமே இல்லாத உள்ளத்தில் மன்னி என்றார். மனமும் மனத்தை அடுத்துள்ள சித்தமும் பருவடிவுடையவையல்ல. ஆதலால்தான் இன்றைய விஞ்ஞானம் உடலினுள் மனம் எங்கேயுள்ளது? என்று கூறமுடியாமல் திணறுகிறது. மனம், சித்தம், புத்தி அகங்காரம் என்ற அந்தக்கரணங்கள் நான்குமே பருவடிவில்லாத நுண்மையான பொருட்கள் என்று அறிந்திருந்தனர் நம்முன்னோர். அதனையே அடிகளார் உள்புகுந்து உளம் மன்னி என்றார். தான் உள்ளே புகுந்த காரணத்தால் போலும், அந்தக் கரு, இடையே அழிந்துவிடாமல் அதனை நன்கு வளருமாறு திருத்தி ஆண்டுகொண்டான். இவ்வாறு கூறும்பொழுதேகூட அவன் உள்ளே புகுந்ததற்கும், கரு நன்கு வளருமாறு செய்தவதற்கும் காரணம் அவனுடைய கருணையே என்பதை நன்றிப் பெருக்கோடு கருத் திருத்தி கருணையினால் ஆண்டு கொண்ட என்று பாடுகிறார். திருவாசகத்தில் இதுவரைக் காணப்பெறாத ஒரு மாபெரும் உண்மை இப்பாடலில் வெளிப்படுகிறது, அடிகளாரின் வரலாறு செம்மையாக எந்த நூலிலும் கூறப்பெறவில்லை. இந்த நிலையில் அமைச்சராக இருந்த அவர், மாபெரும் கவிஞர், மாபெரும் கல்விமான், மாபெரும் அறிவாளி என்ற முறையில் வாழ்ந்த சராசரி மனிதர் என்ற எண்ணத்திலேயே நம் போன்றவர்கள் நினைத்துவந்தோம். அந்த அடிப்படையில்தான் வழியோடு