பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 139 476. வினைப் பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச் சிறிதும் நினையாதே தளர்வு எய்திக் கிடப்பேனை எனைப் பெரிதும் ஆட்கொண்டு என் பிறப்பு அறுத்த இணை இலியை அனைத்து உலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே 2 வினையின் பயனாகக் கிடைத்த இந்தப் பிறவியில் அகப்பட்டதால், எஞ்சியது வேதனை ஒன்றுதான். அந்த வேதனையில் ஆழ்ந்துள்ள காரணத்தால், அதனைப் போக்குபவனைப் பற்றி ஒரு விநாடியும் நினையாமல், அந்த வேதனையைப்பற்றியே மறுபடியும் மறுபடியும் நினைந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அத்தகைய அடிகளாரை, பெருந்துறைக் குருநாதர், தம்மை அவர் நினைக்க வில்லையே என்றுகூடக் கருதாமல் பிடித்து ஆட்கொண்டு, போக்குதற்கு அரிய பிறவிப் பிணியையும் போக்கி அருளினார். அந்த உபகாரத்தை நினைந்து மறுபடியும் அவரைக் காணவேண்டும் என்ற ஆதங்கத்தோடு ஊரூராகத் திரிந்த அடிகளாருக்குத் தில்லையில் கிடைத்த கூத்தன் காட்சி குருநாதரையே நினைவூட்டியதால் ‘அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே' என்று பாடுகிறார். 477. உருத் தெரியாக் காலத்தே உள் புகுந்து என் உளம் - மன்னிக் கருத்திருத்தி ஊன் புக்குக் கருணையினால் . . ஆண்டுகொண்ட திருத்துருத்தி மேயானைத் தித்திக்கும் சிவபதத்தை அருத்தியினால் நாய் அடியேன் அணி கொள் தில்லை - - கண்டேனே 3 சுக்கிலமும் சுர்ோணிதமும் ஒன்று கலந்து ஒரு வடிவைப் பெருவதற்கு முன்னரேகூட அவற்றினுள்