பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அங்ங்ணம் புகுந்தவன் யார் என்று சிந்திக்கத் தொடங்கிய அடிகளாருக்குத் தில்லைக் கூத்தன் காட்சி கிடைத்ததும், உள்ளே புகுந்தவன் இவன்தான் என்ற a ciréjorital (realization) goul L-5, 478. கல்லாத புல் அறிவின் கடைப்பட்ட நாயேனை வல்லாளனாய் வந்து வனப்பு எய்தி இருக்கும் வண்ணம் பல்லோரும் காண என்தன் பசு பாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே 4 இப்பாடலுக்கு வாலாயமாகப் பொருள்செய்யும் முறையில் அல்லாமல் பின்வருமாறு கொண்டுசுட்டுச் செய்துகொண்டு பொருளுரைத்தல் சிறப்புடையதென்று தோன்றுகிறது. அதாவது வல்லாளனாய் வந்து கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை, பல்லோரும் காண வனப்பு எய்தி இருக்கும் வண்ணம் (காட்டி, எந்தன் பசு பாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சு தில்லை அம்பலத்தே கண்டேனே' என்றவாறு. மாபெரும் அருஞ் செயல்களைச் செய்யக்கூடிய ஆற்றல் மிக்கவராயும், அழகு மிகுந்த குருநாதர் வடிவு கொண்டவராயும் உள்ள ஒருவர், பலரும் காணத் திருப்பெருந்துறையில் எழுந்தருளினார். தாம் குருந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் நிலையை அவர் எனக்குக் காட்டியதுடன், கல்வி அறிவு இல்லாமல் புல்லறி வாண்மையொடு சுற்றித்திரிந்த நாய்போன்றவனாகிய என்னுடைய பசு பாசத்தையும் அறுத்தார். அந்தக் குருநாதர் எங்கே போனார் என்று தேடித்திரிந்த நான், எல்லோரும் வணங்கி ஏத்தும் தில்லையம்பலத்தே அவரைக் கண்டேன் என்றவாறு. திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் அடிகளார் முதலில் கண்டது குருநாதரை; இரண்டாவதாகக் கண்டது அம்மை அப்பரை; கடைசியாகக் கண்டது தில்லைக் கூத்தனை, குருநாதரைத் தேடிவந்த அடிகளாருக்குத் தில்லையில்