பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 147 முதலில் கிடைத்தது தில்லைக்கூத்தன் தரிசனம்; அடுத்துக் கிடைத்தது குருநாதர் தரிசனம். குருநாதர் வேறு, தில்லைக்கூத்தன் வேறு என்று நினைக்கின்ற நினைவு நீங்கி, இருவரும் ஒருவரே என்ற எண்ண்ம் திருப்பெருந்துறை யிலேயே தோன்றி வலுப்பெற்றுவிட்டது. ஆதலால்தான், திருவடி தீட்சையின் மூலம், பசு பாசம் அறுத்த குருநாதரைத் தில்லையில் கண்டேனே என்று பாடுகிறார். 479. சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு பேதை குணம் பிறர் உருவம் யான் எனது என்உரை மாய்த்துக் கோது இல் அமுது ஆனானைக் குலாவு தில்லை - கண்டேனே 5 'நால்வகை வருணத்துள் இன்ன குடியில் உயர்ந்த பிறப்பெடுத்தவர் இவர், அல்லாதவர் இவர் என்ற வேறுபாட்டைத் தொடக்கத்திலிருந்தே நினைத்துப் பழகியமையின், மீட்டு வரமுடியாத நீர்ச்சுழலில் அகப்பட்டவன் ஆயினேன். என்னை நல்வழிப்படுத்தி ஆதரவு தருவார் யாருமில்லாத நாயேனாக இருந்தேன். அவ்வாறிருந்த என்னை ஆட்கொள்ள விரும்பினார் குருநாதர். என்பால் நிறைந்திருந்த பேதைமைக் குணத்தையும், ஏனையோர் வடிவைக் கண்டு இவர் உற்றார் என்றும் இவர் மற்றவர் என்றும் இவர் பகைவர் என்றும் வேறுபடுத்திக் காணும் மன இயல்பையும் போக்கினார். அன்றியும் யான் எனது என்னும் செருக்கு நிறைந்த என் சொற்களையும் மாய்த்ததன்மூலம் இப்பிறப்பிலுள்ள அல்லலைப் போக்கினார். இந்த அல்லல்களை அறுத்ததன் பின்னர் என்னை ஆட்கொள்ளவும் செய்தார். அவ்வாறு செய்த அமுது போன்ற குருநாதரைக் குலாவு தில்லையில் கண்டேனே' என்றவாறு.