பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 480. பிறவி தனை அற மாற்றிப் பிணி மூப்பு என்ற இவை இரண்டும் உறவினொடும் ஒழியச் சென்று உலகு உடைய ஒரு முதலைச் செறி பொழில் சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிட நான் கண்டேனே 6 இப்பிறவியோடு ஒட்டிக்கொண்டிருக்கும் பிணி, மூப்பு என்ற இரண்டினையும் முதலில் போக்கினார். இவை இரண்டும் உடல் பற்றியவை அடுத்து, இவ்வுடம்பு காரணமாகத் தோன்றிய உறவுகளையும் நீக்கினார். அதன் பின்னரே இப்பிறவியை அடியோடு போக்கினார். இவற்றைச் செய்தபின்னர்க் குருநாதர் தாம் ஏற்றிருந்த வடிவை விட்டுச் சென்று திருச்சிற்றம்பலத்தில் மன்னினார். ‘என்போன்ற ஒர் எளியவனுக்காகக் குரு வடிவு பெற்று, குருந்த மரத்து அடியில் தங்கி, இவற்றையெல்லாம் செய்துவிட்டுச் சென்று, தில்லை மன்னிய காரணத்தால் இவரைச் சாதாரணமாக நினைத்துவிடவேண்டா. இவரே பிரபஞ்ச காரணர். அன்றியும் தில்லையில் தங்கிய இவரை மறையவர் எனப்படும் பூசுரரும் வானவர் எனப்படும் சுரரும் வந்து வணங்கி நிற்றலை நான் கண்டேன்’ என்றவாறு. 481. பத்திமையும் பரிசும் இலாப் பசு பாசம் அறுத்தருளிப் பித்தன் இவன் என என்னை ஆக்குவித்துப் பேராமே சித்தம் எனும் திண் கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே 7 பசுத்துவம் என்பது மனிதர்களுக்குரிய இயல்பாகும்; பாசம் என்பது அப்பசுத்துவத்தோடு இணைந்து நிற்பதாகும் பாசம் என்பது தம்மையன்றியும் மற்றொன்றினிடத்து ஈடுபாடும் உறவும் கொள்ளுதல் ஆகும். என்றாலும், இறைவனிடத்துப் பக்தி செய்தல், அதனால் தம் தகுதியை உயர்த்திக்கொள்ளுதல் என்ற இரண்டையும் பசுக்கள்