பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 149 (ஆன்மாக்கள்) செய்யக்கூடும். பாசம் நிறைந்திருப்பதால் பசுக்கள் (ஆன்மாக்கள்) பத்திமையைக் கைவிட வேண்டிய அவசியமில்லை. மற்றவற்றினிடத்து ஈடுபாடும் உறவும் கொள்ளும் இப்பாசத்தை இறைவன்மாட்டும் செலுத்தலாம் அல்லவா? அப்படிச் செலுத்தும்போது அந்தப் பாசம் உயர்ந்ததாகிவிடுகிறது. அத்தகைய உயர்ந்த பாசம் தம்பால் இல்லாமையால், பக்தியும், பரிசும் இல்லாத அப்பசு பாசத்தை முழுவதுமாகக் குருநாதர் போக்கினார் என்கிறார். உயிர்களுக்கு இயல்பாகவுள்ள பாசம் நீங்கினால் எந்த ஒன்றிலும் பற்றுக் கொள்ளாமல் பித்தர்போல் அலைய நேரிடும். குருநாதர் அருள்செய்த பிறகு, இவ்வாறு தம்மை அலையச் செய்தார் என்கிறார். இக்கருத்தை அடிகளார் கூறிய விதம் ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. பித்தன் இவன் என, என்னை ஆக்குவித்து, பேராமே, சித்தம் எனும் திண்கயிற்றால் திருப்பாதம் கட்டுவித்த வித்தகனார்’ என்பது அவருடைய பாடல். ஒருவன் பித்தனாக ஆகிவிட்டான் என்றால் எந்த ஒன்றினும் அவன் மனமும் அறிவும் நிலைகொள்ளாமல் சுற்றத் தொடங்கிவிடும். இது சாதாரணப் பித்தர்களுக்குரிய இயல்பு. ஆனால், அடிகளாரைப் பித்தனாக்கியவர் வல்லாளர் அல்லவா? ஆதலால், அடிகளாரைப் பித்தனாக்கிய அதே நேரத்தில் அடிகளாருடைய மனம், சித்தம் என்பவை பித்தர்களுக்கு உள்ளதுபோல் நிலைகுலைந்து சுற்றாமல் ஒரே இடத்தில் நிலைபெறுமாறு செய்தார். அதாவது பேராமல் இருக்கச் செய்தார். அதற்கு மேலும் ஒரு காரியத்தைக் குருநாதர் செய்தார். அவர் எதிரே இருக்கின்றவரையில், பெயராதிருந்த அடிகளார் மனம் அவர் அப்பால் போனவுடன் எங்கே நிலைகுலைந்து பெயர்ந்துவிடுமோ என்று நினைத்த குருநாதர் ஒர் ஒப்பற்ற காரியத்தை செய்தார். பெயர்ந்து