பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மனத்திடைத் தோன்றி மறைகின்றன. இந்த நினைவு அலைகளிலிருந்து மனம் விடுபடுவது எளிதான ஒன்றன்று. வாய் பேச முடியாத ஊமைகளுக்கும், வாய் பேசாமல் மெளனம் சாதிப்பவர்களுக்கும்கூட இந்த இயல்பு பொதுவானதே ஆகும். இதனையே தாயுமானவப் பெருந்தகை ஒரு கணமேனும் கண்மூடி மெளனியாய் இருக்கவென்றால், இப்பாழ்த்த கன்மங்கள், போராடுதே' என்று பாடியுள்ளார். "சும்மா இரு சொல்லற (கந்அனு:12) என்று அருணகிரிப்பெருமான் கூறுவதும் இப்பொருளையே தருவதாகும். 'சொல் அற' என்றால், பேசாமல் வாய் மூடிக்கொண்டிருத்தல் என்பது பொருளன்று. சொல்லின்றி எண்ணமில்லை ஆகவே, சொல்லற என்பது மனத்திடை எந்த எண்ணமும் சொல்வடிவும்) இல்லாதிருத்தலே ஆகும். அதனையே அருணகிரியார் குறிப்பிடுகின்றார். மனித மனத்தின் இயல்பு இதுவாதலின் அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு என்று பாடுகிறார். அடுத்து நிற்பது 'அறிவின்றி விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு” என்ற பகுதியாகும். எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே. என்று தொல்காப்பியனார் கூறுவதுபோல எல்லாச் செயலும் பயனையே விளைக்கும் என்று எளிதில் கூறிவிடலாம். ஆனால், எந்தச் செயல், எந்தப் பயனை, எப்போது விளைக்கும் என்ற வினாக்களுக்கு அறிவின் துணை கொண்டுதான் விடை காணமுடியும். அந்த அறிவு இல்லாத ஒருவன், எந்த ஒரு சொல்லின் அல்லது எந்த ஒரு செயலின் விளைவையோ அல்லது பயனையோ அறியமுடியாது. . விளைவை அறிந்துகொள்ளும் ஆற்றலுடைய அறிவு இல்லாத ஒருவனை வெற்றாள்' என்றும் பதர் என்றும் பயனை அறியாத மூர்க்கன் என்றும் கூறுவர். இத்தகைய