பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ட பத்து 151 இவ்வாறு பொருள் கூறுவதற்கு அடிகளார் திருவண்டப் பகுதியில் கூறியுள்ள தாள் தளை இடுமின்’ (திருவாச.3 - 143) என்ற தொடர் துணை செய்கிறது. அண்ட பேரண்டம் அனைத்தையும் கடந்து நிற்கும் அத்திருவடிகளை, அண்மையில் ஆட்கொள்ளப்பெற்ற அடிகளார் போன்ற ஒருவர் கட்டும்படி அத்திருவடிகளுக்கு, உரியவன் இணங்கினான் என்றால் எப்பயன் கருதி இதனைச் செய்தான்? எவ்விதப் பயனனையும் கருதாமல் செய்யப்படும் செயல் விளையாட்டு எனப்படும். எவ்விதப் பயனையும் கருதாமல் பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முறையில் தோற்றுவித்துக், காத்து, அழிக்கின்றான் என்றால், 9ےIEi[ அவனுக்கு ஒரு விளையாட்டே ஆகும். இதனையே அடிகளார் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி (திருவாச.166) என்று பாடியுள்ளார். அதேபோல ஒர் அன்ப்ர் தம் திருவடிகளைக் கட்ட அவன் இணங்கியது அவனுக்கு ஒரு விளையாட்டு என்ற கருத்தில் வித்தகனார் விளையாடல் விளங்கு தில்லை கண்டேனே' என்கிறார். 482. அளவு இலாப் பாவகத்தால் அமுக்கு உண்டு இங்கு அறிவு இன்றி விளைவு ஒன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவு இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானைக் களவு இலா வானவரும் தொழும் தில்லை கண்டேனே 8 'அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டு’ என்பது முதலடியாகும். அதாவது எண்ணிலடங்காத நினைவுகளால் அமுக்கப்பட்டு என்ற பொருளைத் தரும். மனித மனத்துக்குள்ள ஒரு தனி இயல்பை அடிகளார் இங்கே சுட்டுகிறார். பயனுடையனவும் பயனில்லாதனவும் ஆகிய ஆயிரக் கணக்கான எண்ணங்கள் விநாடிதோறும்