பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 காலங்கள் எத்தனையோ உண்டு. அந்தக் காலகட்டத்தில் அவனுடைய அடியார்களோடு கூடிக் கலந்து நின்று எல்லையில்லாத ஆனந்த மிகுதியால் (களித்த காலங்கள்) வேறு ஒன்றும் செய்யாமல் செலவிட்ட நாளாகும். அந்த அடியார் கூட்டம் மறைந்துவிட்டதால் வாளா இருக்கவும் முடியவில்லை; களித்திருக்கவும் முடியவில்லை. இவை இரண்டும் இல்லாமல் போனதுமட்டு மன்று. அதற்குப் பதிலாக இந்த அனுபவத்திற்குப் பிற்பட்ட நாட்களில் (பின்னாள்) இடர் புகுந்து நின்றது என்கிறார். களித்திருந்த நாள், இடர் தங்கிய நாட்கள் என்ற இரண்டையுமே புலர்ந்து போன காலங்கள்’ என்ற பொதுச் சொல்லால் குறிக்கின்றார். கூடிநின்றபொழுது வாளா இருத்தலாகிய காஷ்ட மெளனமும் (மரக்கட்டை போலிருத்தல்) களித்து நிற்றலும் நடைபெற்றன. அது பிரிந்தவுடன் அவை இரண்டும் போனதோடுமட்டு மல்லாமல் இடர் புகுந்து நின்றது. ஆன்மாவிற்கு உரத்தைத் தரக்கூடிய மெளனமும், ஆனந்தமும், ஒழிந்தன; அல்லாமல், இடரும் புகுந்தது. ஆதலால் 'உலர்ந்து போனேன்’ என்கிறார் அடிகளார். உலர்ந்துபோன ஆன்மா மறுபடியும் தளிர்க்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? முன்னர் அதற்கிருந்த களிப்பை மீட்டும் அது பெறுமாறு செய்ய வேண்டும். அந்தக் களிப்பு எப்படிக் கிடைத்தது? அடியார்களோடுக் கூடிக் கலந்து நின்றதால் கிடைத்தது. எனவே, அந்த அடியார் கூட்டம் இப்பொழுது வேண்டும் என்ற கருத்தைத்தான் உலவா இன்பச் சுடர் காண்டான் அலந்து போனேன்’ என்கிறார்.