பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 159 மனநிலையில் இருந்தது என்பவற்றைப் பாடலின் முற்பகுதிகளில் விளக்கிக் கூறிவிட்டு, அப்படிப்பட்ட அடியார் கூட்டத்திடையே தாம் இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை எடுத்துக் கூறி இறைவனை இறைஞ்சும் கருத்தே எல்லாப் பாடல்களிலும் அமைந்துள்ளது. 'சதா முத்தி என்ற உள் தலைப்பு பொருந்துவதாகத் தெரியவில்லை. முத்தி என்றாலே முடிவில்லாத, நிரதிசய இன்பம் அல்லது வீடுபேறு என்ற பொருளைத் தந்து நிற்கும். அந்தச் சொல்லை எடுத்துக்கொண்டு சதா என்ற சொல்லை அதனோடு ஒட்டுவதால் முத்தி என்ற சொல்லின் பொருளே அடிபட்டுப் போய்விடுகிறது. ஆகவே, இந்த உள்தலைப்பு பொருந்துமாறில்லை என்பது தெளிவாகிறது. 485, கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன் புலர்ந்து போன காலங்கள் புகுந்து நின்றது இடர் பின்நாள் உலர்ந்து போனேன் உடையானே உலவா இன்பச் சுடர் காண்பான் அலந்து போனேன் அருள் செய்யாய் ஆர்வம் கூர அடியேற்கே . f ‘புலர்ந்து போன காலங்கள்’ என்பது அன்றன்று தோன்றி மறைந்த பல நாட்களைக் குறிப்பதாகும். இங்கே அடிகளார் திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்கு முந்திய காலங்களையும், அந்த நிகழ்ச்சிக் காலத்தையும், அந்நிகழ்ச்சி நடைபெற்றதற்குப் பின்புள்ள காலங்களையும் ஒரு கண்ணோட்டம் விடுகிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. இப்பாடலைப் பாடுகின்ற நாள்வரை புலர்ந்து புலர்ந்து மடிந்துபோன நாட்கள் அல்லது