பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 காரணம் அவருடைய அடிமனத்திலிருந்த ஒர் எண்ணமே ஆகும். குருநாதர்முன் அமர்ந்திருந்த அடியார்கள் அவருடனேயே போய்விட்டார்கள். அந்த அடியார் களுடனேயே ஒரு சில நேரம் இருந்தும், அவர்களுடனேயே தாம் செல்ல முடியாமைக்குக் காரணம், தம் பரு உடம்புதான் என்று அடிகளார் கருதுகின்றார். எனவே, அடியார்களுடன் போகாமல் தம்மைத் தடுத்த இந்தப் பரு உடம்பின்மேல் எல்லையற்ற சினம் உண்டாகிறது. அதன் பயனாகவே மேலே உள்ளன போன்ற சொற்கள் திருவாசகத்தில் பல இடங்களில் இடம்பெற்றுளளன. மூன்றாம், நான்காம் அடிகளில் இந்த உடம்பு தம்மை விட்டு நீங்காமைக்கும், அவன் அருள் கிட்டாமைக்கும் யாது காரணம் என்ற ஆராய்ச்சியில் புகுகின்றார். தம்முடைய எண்ணம் ஈடேறாமல் இருப்பதற்கும், இந்த உடம்பு தம்மைவிட்டுக் கழலாமல் இருப்பதற்கும் ஒரே காரணம் தம்முடைய கடுவினைதான் என்று கருதினார். ஆதலின், இப்பொழுது கடியேனுடைய கடுவினையைக் களைந்தருள்வாய்' என்று வேண்டுகிறார். பாடலில் அடுத்துள்ளது அவன் அருள் பொங்க வேண்டும் என்பதாகும். அருள் எப்பொழுது பொங்கும்? அவன் அருள் பொங்குவதற்கும் தம் உள்ளத்தில் ஒரு மாற்றம் நிகழவேண்டும் என்பதை இந்தக் குறைந்த கால அனுபவத்தில் கண்டுகொண்டார். உள்ளம் உருக உருக, அந்த உருக்கத்திற்கேற்பக் கருணை பொங்கும். எனவேதான், 'உடையானே நின் கருணைக் கடல் பொங்க, என் உள்ளத்து உருக்கம் இடையறாது (ஒவாது) நிகழ அருளவேண்டும்’ என்கிறார். - பாடலின் மூன்றாம் நான்காம் அடிகள் மூன்று பொருள்களை இறைவன் அருள வேண்டும் என்பதைக்