பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 165 குறிக்கின்றன. அருளாய்” என்ற முடிவு மத்திம தீபமாக நின்று மூன்று வினையெச்சங்களோடு தனித்தனியே இணைந்து பொருள் தருகிறது. கடுவினை களைந்து அருளாயே; கருணைக் கடல் பொங்க அருளாயே; ஒவாது உருக அருளாயே என்பவையே அம்மூன்றுமாம். இம்மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன. கடுவினை இருக்கின்ற வரையில் உள்ள உருக்கமோ அதன் பயனாகத் தோன்றும் அருளோ வெளிப்படப் போவதில்லை. எனவே, கடுவினையைக் களைந்து அருளாயே உள்ளம் ஒவாது உருக அருளாயே; உன் கருணைக் கடல் பொங்க அருளாயே என்று முடிக்கின்றார். இவை ஒன்றின் பயனாக ஒன்று தோன்றுகின்றன. 487. அருள் ஆர் அமுதப் பெரும் கடல்வாய் அடியார் எல்லாம் புக்கு அழுந்த இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன் கண்டாய் எம்மானே மருள் ஆர் மனத்து ஓர் உன்மத்தன் வருமால் என்று இங்கு எனைக் கண்டார் வெருளாவண்ணம் மெய் அன்பை உடையாய் பெற நான் வேண்டுமே 3 இப்பாடலின் முதலிரண்டு அடிகள் இதுவரை கூறிவந்த கருத்தை வலியுறுத்துவனவாகவே அமைந்துள்ளன. 'அருள் ஆர் அமுதப் பெருங்கடல் என்பது திருவருளாகிய பெருங்கடல் என்றும், அமுதப் பெருங்கடல் என்றும் பிரிந்து நின்று, இரண்டு பொருள்களைத் தருகின்றது. அமுது, இறவாமையைத் தருவது என்பர். இறவாமை மட்டும் பெற்றுவிட்டால் எவ்விதப் பயனுமின்றி, அழிவுமி ன்றி, இந்த ஆன்மா அலைய நேரிடும். இறையருள் என்பது