பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்த ஆன்மாவை உய்விக்கக்கூடியது ஆதலின் இரண்டையும் ஒன்றாக இணைத்து அருள் அர் அமுதக் கடல்’ என்றார். பாடலின் முதல் இரண்டு அடிகள் திருப்பெருந்துறை அனுபவத்தை நினைந்து கூறியனவாகும். 'புக்கு அழுந்த என்றமையால், அடிகளாரின் கண்ணெதிரே குருநாதருடன் அமர்ந்திருந்த அடியார் கூட்டத்தை நினைந்து பாடியது என்று கொள்வதில் தவறில்லை. புக்கு அழுந்திய அடியார்களோடு தாமும் உடன் செல்ல முடியாமைக்குக் காரணம் இருள் ஆர் ஆக்கையே என்ற தம் நம்பிக்கையை முன்னர்ப் பல இடங்களில் கூறியதுபோல இங்கும் கூறுகிறார். இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அவலநிலை அடிகளார் நினைவிற்கு வருகிறது. உலகிடை இன்னும் பரு உடலோடு வாழ்கின்ற காரணத்தால், 'புக்கு அழுந்திய’ அடியார்களுடன் செல்லவில்லை என்று நினைக்கின்றார். அது நடைபெறாமல் இந்த இருளார் ஆக்கையைச் சுமந்து வாழவேண்டிய நிலை உண்டாயிற்று என்பதைக் கூறவந்த அடிகளார், 'இருள் ஆர் ஆக்கை இது பொறுத்தே எய்த்தேன்’ என்கிறார். பொறுத்தல் என்ற சொல் ஆழ்ந்த சிந்தனைக் குரியதாகும். பாரத்தைச் சுமக்கின்ற ஒருவன் அதனைத் தாங்கமுடியாத நிலை வந்தால், அந்தப் பாரத்தைக் கீழே தள்ளிவிடுவான். ஆனால், அடிகளாருடைய பாரம், அவருடைய விருப்பத்திற்கேற்பக் கீழே தள்ளிவிடும் நிலை யிலில்லை. ஆக்கையாகிய இந்தப் பாரத்தை உடையவன் உத்தரவிடுகின்றவரையில், விரும்பினாலும் விரும்பா விட்டாலும் சுமந்தே தீரவேண்டிய நிலை யிலுள்ளார். ஆதலின், இருளார் ஆக்கை இது பொறுத் தேன்’ என்றார். விருப்பமின்றி ஆக்கையாகிய இந்தப் பாரத்தைச் சுமந்து