பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 169 உள்ளே' என்பது என்னை ஆண்டது மட்டுமா? உன் திருவடியையே வேண்டுகின்ற அடியார் கூட்டத்தினுள்ளே இருக்குமாறு செய்தாய் என்பதாம். வேண்டாத ஒன்றும் வேண்டாது' என்பது திருப்பெருந்துறையில் நின் அருளைப்பெற்றேன் ஆதலின், விரும்பத்தகாத எதனையும் விரும்பாமல் என்ற பொருளைத் தரும். 'மிக்க அன்பு மேவுதலே வேண்டும்’ என்பது நின் திருவடிக்கண் நாளும் நாளும் வளர்கின்ற இயல்புடைய மிகுதியான அன்பே வேண்டும் என்றவாறு. 'தொண்டனேற்கும் உண்டாம் கொல்’ என்பது விரும்பத்தகாத எதிலும் ஈடுபாடு கொள்ளாமல் உன் திருவடிக்கண் வளர்கின்ற அன்பைச் செலுத்தும் ஒரு நிலை தொண்டனாகிய எனக்கும் உண்டாகுமோ? என்பதாம். இப்பாடலில் வரும் வேண்டாத ஒன்றும் வேண்டாது' என்ற தொடர் சற்று வியப்பைத் தருகிறது. திருப்பெருந்துறையில் திருவடி தீட்சை பெற்ற பிறகு மணிவாசகராக மாறி, பல தலங்களுக்கும் சென்று, வழிபாடு செய்தவர் இப்பெருமகனார். தெளிவு குருவின் திருமேனி காண்டல் (திருமந்திரம் 139) என்ற திருமூலரின் சொற்களுக்கு ஏற்ப, பெருந்துறையில் கிடைத்த குருதரிசனம் மறுபடியும் கிட்டுமா என்ற ஆர்வத்தால் ஊர்தோறும் யாத்திரை செய்த அடிகளாருக்குத், திருக்கழுக்குன்றில் குருநாதரின் தரிசனத்தோடு கணக்கிலாக் கோலத்தையும் காட்டியருளினார். அப்படியிருக்க, வேண்டாத ஒன்றும் வேண்டாது' என்று அடிகளார் பாடவேண்டிய காரணமென்ன? திருவாதவூரராக இருக்கும்போது இவ்வாறு சொல்லியிருப்பின் சரி. ஆனால் மணிவாசகர், கழுக்குன்றில் மீட்டும் குருதரிசனம் பெற்ற அடிகளார், வேண்டாத ஒன்றும் வேண்டாது என்று பாடுவது பொருந்துமா என்ற

  1. LálaflIV 12