பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 173 ஆக, தொடக்கத்தில் நான் இருந்தது உண்மைதான். குருநாதர் இவரைப் பார்த்துப் புன்முறுவல் செய்கையில் எதிரே குருநாதர் இருந்தார். ஒரே விநாடியில் அவர் மறைந்து, அவர் இருந்த இடத்தில் உமையொருபாகன் தோன்றினான். அடுத்த கணம் உமையொருபாகன் மறையத் தில்லைக் கூத்தன் தோன்றுகிறான். ஆதலின் பார்த்துக் கொண்டிருந்த அடிகளார் கொஞ்சம் கொஞ்சமாகத் "தம்மை நான் இழக்கின்றார். அடியார்களிடையே பரு உடலுடன் அமர்ந்த அடிகளாருக்கு எனது உடல் என்ற எண்ணம் ஒரே விநாடி யில் மறைந்து, அமுதப் பெருங்கடலில் மூழ்கி விட்டார். அதுதான் நானும் எனதும் மறைந்த இடம். இந்த நானும் எனதும் மறைந்தவுடன் நான் என்ற எண்ணத்திற்கு மூலமான ஆவிபற்றிய நினைவும் எனது என்பதற்கு மூலமான உடல்பற்றிய நினைவும் ஒருங்கே மாய்ந்துவிடக் காண்கிறோம். திருப்பெருந்துறையில் ஆவி, யாக்கை, நான், எனது என்ற நான்கும் மறைந்தாலும், அந்நாடகம் முடிவுற்ற சில நேரத்தில் இவை மீட்டும் தலைதுாக்கலாயின. இந்த நான்கும் எவ்வளவு வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தாலும் இவற்றை மறந்திருந்த ஒரு சில நேரமும், அதிற் கிடைத்த இன்ப அனுபவமும் அடிகளார் ஆழ்மனத்திலிருந்து நீங்கவேயில்லை. இன்ப அனுபவத்தைப் பெற்ற ஒருவன், மீட்டும் அது எப்போது கிட்டும் என்று, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஏங்கி நிற்பது மனித இயல்பு. இதே அடிப்படையில் குருநாதர் தரிசனம், அடியார்களுடன் இருக்கை என்ற இரண்டும் எப்பொழுது கிட்டும் என்ற ஒரே நினைவுடன் உன்மத்தர்போல ஊரூராகத் திரிந்த அடிகளார், இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.