பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இவை இரண்டும் அன்றும் தம்முடைய முயற்சியால் கிட்டவில்லை. குருநாதரின் கருணை காரணமாகத்தான் இவை இரண்டும் கிட்டின. ஆதலால், பழமையை நினைந்து, அதனைத் தருமாறு வேண்டுகிறார். "ஐயா! உன் மெய்யடியார்கள் அமிழ்ந்து நிற்கும் பரமானந்தப் பழங் கடலில் மூழ்கி, "நான், எனது, உடல், உயிர் என்பவற்றை மறந்திருக்கும் காலம் பாவியேனாகிய எனக்கும் கிட்டுமோ? என்றபடி, 490. அறவே பெற்றார் நின் அன்பர் அந்தம் இன்றி அகம் நெகவும் புறமே கிடந்து புலை நாயேன் புலம்புகின்றேன் உடையானே பெறவே வேண்டும் மெய்யன்பு பேரா ஒழியாப் பிரிவு இல்லா மறவா நினையா அளவு இலா மாளா இன்ப மா கடலே 6 'உடையானே! திருப்பெருந்துறையில் நின் அருளை முழுவதுமாகப் (அறவே) பெற்ற மெய்யடியார்கள், முடிவில்லாமல் (அந்தமின்றி) உள்ளத்தில் ஆனந்த நெகிழ்ச்சியைப் பெற்றார்கள். ஒரு சில நேரம் அவர்களுடன் இருந்து இந்த ஆனந்தத்தில் பங்குபெற்ற நாயேனாகிய யான், அவர்களுடன் செல்லாமல் புறத்தே கிடந்து புலம்புகின்றேன், என் வினை இருந்தவாறு இது. 'ஒரு நிலையிலிருந்து பெயராத (பேரா), விட்டு நீங்காத (ஒழியா), ஒரு முறை இணைந்துவிட்டால் பிறகு பிரிவே இல்லாத (பிரிவு இல்லா, மறத்தலும் மீண்டு நினைத்தலும் இல்லாமறவா, நினையா) எல்லையில்லாத (அளவு இலா அழிவில்லாத (மாளா) இன்பமே வடிவாயுள்ள மாபெரும்