பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 175 கடல்போன்ற பெருமானே! மேலே கூறிய அடியார்களைப் போல யானும் மெய்யன்பைப் பெறவேண்டும்’ என்றவாறு. 'ஒழியா’, ‘மாளா என்பன ஒரு பொருள் குறித்த இரு சொல்லாக இருப்பினும், இவற்றிடையே ஒரு சிறு வேறுபாடு உண்டு. ஒழிதல் என்பது ஒரு சிறு பொழுது இல்லாது இருந்து மீண்டும் தோன்றுதலையும், மாளுதல் என்பது ஒரேயடியாக இல்லாமல் போவதையும் குறிக்கும். பாடலில் காட்டப்பெற்ற ஏழு அடைமொழிகளும் இன்பம் என்ற சொல்லுக்கு அடையாக வந்துள்ளன. இந்த இயல்புகளால் பெற்றுள்ள ஒன்றை இன்பம் என்ற சொல்லால் குறித்தாரேனும் அடிகளார் கருதியது முடிவிலாத ஆனந்தத்தையேயாம். - 491. கடலேஅனைய ஆனந்தம் கண்டார் எல்லாம் கவர்ந்து உண்ண இடரே பெருக்கி ஏசற்று இங்கு இருத்தல் அழகோ அடி நாயேன் உடையாய் நீயே அருளுதி என்று உணர்த்தாது ஒழிந்தே கழிந்தொழிந்தேன் சுடர் ஆர் அருளால் இருள் நீங்கச் சோதி இனித்தான் துணியாயே 7 'திருப்பெருந்துறையில் நிறைந்திருந்த அடியார் கூட்டத் தார் குருநாதரைத் தரிசித்துக்கொண் டிருக்கும்பொழுதே கிடைத்த ஆனந்தமாகிய கடலை வேண்டுமட்டும் வாரி உண்டார்கள். அவர்கள் அவ்வாறிருக்க, குருநாதரைக் கண்டுகொண்டிருந்த நாயேனாகிய நான், அவர்களுடன் செல்லாமல் துன்பத்தைத் தரும் செயல்களையே பெரிதும் செய்து, அதன் பயனாக மேலும்மேலும் துன்பத்தைப் பெருக்கிக்கொண்டு இருக்கலானேன். இதனைப் பார்த்துக் கொண்டிருத்தல் உனக்கு அழகாகுமோ?