பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'உடையாய்! நீ எனக்கு எஜமானன். என்ற காரணத்தால் எனக்குத் தேவையானவற்றை நீ அருள்வாய் என்ற கருத்தில், என் குறைகளைப் போக்கவேண்டுமென்று உன்னிடம் விண்ணப்பம் செய்யாமல் (உணர்த்தாது ஒழிந்தே இதுவரை காலத்தைக் கழித்துவிட்டேன். சோதிவடிவான பெருமானே! உன்னுடைய அருள் ஒளியாகிய கருவியைக் கொண்டு என் அஞ்ஞானமாகிய இருளை இப்பொழுதாவது இனித்தான்) துணிந்து வேறுபடுத்துவாயாக! இதுவே என் விண்ணப்பம்’ என்கிறார். இதுவரை வந்துள்ள பாடல்களில் காணப்பெறாத ஒரு புதுமை இப்பாடலில் இடம்பெற்றுள்ளது. வழியோடு போன தம்மை, இழுத்து, ஆட்கொண்டு திருவடி தீட்சையும் செய்த எஜமானனிடம் தம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டார் மணிவாசகர். மேலும் வேண்டத் தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ. வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னின் அதுவும் உந்தன் விருப்பன்றே (திருவாச 50) என்றும், நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே திருவாச 502) என்றும் அவரே பாடியுள்ளார். அன்றியும் திருப்பெருந்துறையில் அடிகளார் கண்ட அடியார் கூட்டம், கடல்போன்ற ஆனந்தத்தைக் அள்ளியள்ளி உண்டதே தவிர, என்ன வேண்டுமென்று, வாய்திறந்து கேட்கவில்லை. இவற்றையெல்லாம் பார்த்த அடிகளார் தம் குறைகளைப் போக்குமாறு இறைவனிடம் விண்ணப்பம் செய்யத் தேவையில்லை என்று கருதியிருக்க வேண்டும். தம்மாட்டுள்ள குறைகளைப் போக்கித் தமக்கு அருள் செய்யவேண்டியது உடையவனுடைய கடமை ஆகும். அன்றியும் தமக்கென்று ஒரு விருப்பமோ, அதை