பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 181 முழுவதுமாகத் தரும் இயல்புடையவர்கள். இறைவனும் வள்ளல் என்றே பல இடங்களில் குறிப்பிடப்படுகிறான். அதனை விளக்கவே தாரா அருள் ஒன்று இன்றியே’ என்றார். அதாவது அடியார்க்கு அருள் செய்யும்போது, பிறர்க்குப் பங்கிடப்படாது தன்மாட்டே இருத்திக் கொள்ளும் அருள் என்ற ஒன்று அவன் பாலில்லை என்பதாம். அப்படிப்பட்ட அருளைப் பெற்ற அடியார்கள் அதனை அள்ளி உண்கின்றார்கள். அப்படி உண்கின்ற அடியார்களை இறைவனின் ‘தமர் என்கிறார் அடிகளார். 'இத்தகைய தமர்களின் இடையே சிலநேரம் கழிக்க வாய்ப்புப் பெற்றிருந்தும், அது நிலைபெறாமையால் தமியேனும் அருளைப் பெறாத அயலார்போல மனம் அயரும் நிலைக்கு ஆளாவது முறையோ?” என்கிறார் அடிகளார். 'சிறப்புப் பொருந்திய உன்னுடைய திருவருள் காரணமாக என் சிந்தனையை உன்பால் செல்லும் வண்ணம் திருத்தி ஆட்கொண்ட சிவலோகனே! திருப்பெருந்துறையில் நிகழ்ந்ததுபோல் அல்லாமல் பேரானந்தம் என்னைவிட்டு நீங்காமல் இருக்க அருள்புரிய வேண்டும் பெருமானே! என்கிறார். உலகிடை உள்ள இன்பம், மகிழ்ச்சி என்பவை நிலைபேறுடையன அல்ல; இறைவனுடைய அருள் அத்தகையதன்று. அந்த அருளைத் தருபவன்தானும் ஒளிவுமறைவின்றி முழுவதுமாக அள்ளித் தருகின்றான். அதனை உண்கின்ற அடியார்கள், இந்த ஆனந்த அனுபவத்திற்குத் தொடக்கம், இறுதி, எல்லை என்ற ஒன்றும் இன்மையால் அதனை உண்டுகொண்டே இருக்கிறார்கள். (ஆரா நின்றார்)