பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 'உள்ளிடு அற்ற சுரைக் குடுக்கைபோல், நான் இங்கே அலமர, அடியார் கூட்டத்தோடு எங்கோ சென்று அவர்களுக்கு ஆனந்தம் தந்துகொண்டே இருக்கின்றாய் என் நிலைக்கு இரங்காத நீ, நன்றாக வாழ்ந்து போ ஐயா என்று இரண்டாம் அடியில் குறிப்பிடுவது அடிகளாரின் துயரத்திற்கு எல்லை வகுத்துக் காட்டுகின்றது. நீத்தல் விண்ணப்பத்தின் சில பாடல்களில் இறைவனைக் கேலிசெய்து 'உலகோர் முன்னே உன்னைக் சிரிப்பிப்பன் என்று பாடும்பொழுது அடிகளார் மனத்தில் ஒரளவு தென்பு இருந்தது என்பதை அறியமுடிகிறது ஆனால், நம்பி இனித்தான் வாழ்ந்தாயே என்று பாடும்பொழுது துயரத்தின் எல்லைக்கே சென்றுவிடுகிறார். எவ்வளவு முறையிட்டும் தம் குறையை இறைவன் கண்டுகொள்ளவில்லை என்ற மனநிலை, இவருக்கும் நம்பியாரூரருக்கும் வாழ்க்கையில் அனுபவமாகும். எல்லையற்ற துயரத்தில் இருப்பவர்கள் 'எனக்கு இதனைச் செய்த நீ ஒழிந்து போ’ என்று மனம் நைந்து பேசுவது உலகிடை இன்றும் நாம் காணும் ஒரு சூழ்நிலை யாகும். ஒழிந்து போ’ என்பதைத்தான் ‘வாழ்ந்து போதிரே (திருமுறை:7-95) என்ற சொல்லால் நம்பியாரூரரும் ‘வாழ்ந்தாயே என்ற சொல்லால் அடிகளாரும் பேசுகின்றனர். சுரைக் குடுக்கையை உவமையாகக் கூறியது பல கருத்துக்களை உள்ளடக்கியதாகும். சுரைக்காய் தன் உள்ளேயுள்ள சதைப்பற்று மிகுந்த பகுதிகள் அனைத்தையும் வெளியேவிடாமல் உள்ளேயே அழித்து விடுகிறது. அப்பொழுதுதான் அது குடுக்கை ஆகிறது.