பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரார்த்தனைப் பத்து 187 தம்மை மறந்து ஆடிப் பாடும் அடியார்களிடையே ஆடுதல் பாடுதல் இல்லாவிட்டாலும் உருக்கம்கூட இல்லாமல் தாம் நிற்பதை அடிகளார் நினைக்கின்றார். மரம் என்றால் இலை பூ, காய் என்பவற்றைப் பெற்றிருக்க வேண்டும். அதுபோல ஒரு மனிதன் என்றால் மனிதனுக்குரிய இரக்கம், உருக்கம் ஆகிய பண்புகள் அவனிடத்து இருக்க வேண்டும். இவை ஒன்றுமில்லாது வளர்ந்துநிற்கின்ற தம்மை வற்றல் மரம் என்கிறார் அடிகளார். ஒரு காலத்து, பசுமையோடிருந்து பிறகு இலை முதலிய எதுவுமில்லாமல் காய்ந்து நிற்கும் மரத்தைப் போல எவ்வித வெளிப்பாடும் வளர்ச்சியுமின்றி இருத்தலால் தம்மை வற்றல் மரம் என்றார். 'வழியற்றேன்' என்று கூறிக்கொள்வது போக்கிடம் எதுவும் இன்றி இருத்தல் என்றபடி வழி தெரியாமல் இருப்பது என்பது ஒன்று; வழி இல்லாமல் இருப்பது என்பது ஒன்று. வழி இருந்தும் அதனைத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது முதல் வகையைச் சார்ந்தது. மீண்டுபோகக்கூட வழியில்லாமல் சுற்றிலும் அடைபட்டு, வந்த வழியும் அடைபட்டுப் போதல் இரண்டாவது கை திருப்பெருந்துறை நிகழ்ச்சிக்குப் பிறகு அடியார் கூட்டத்தோடு செல்ல முடியாமையால் முன்னேறும் வழி அடைபட்டுவிட்டது. திருவாதவூரர் மணிவாசகராக மாறி விட்டமையின் மீண்டும் திருவாதவூரர் ஆவதற்கு வழியே இல்லை. அதனாலேயே, தம்மை வழியற்ற வ்ற்றல் மரம் என்கிறார். - சிற்றின்பம் பேரின்பம் இரண்டிலும் ஊடுதலும், கூடுதலும் பேசப்பெறுகின்றன. சிற்றின்பத்தில் ஊடுதல் கூடுதலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், பேரின்பத்திலும் இவ்வாறு இருக்குமா என்பது நம் போன்றவர் அறியமுடியாத ஒன்றாகும். திருவடியில்