பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஆனால், சுரைக்குடுக்கைக்குரிய மூன்று இயல்புகளில் (காய்ந்து போதல், உட்புகவிடாமை, மிதத்தல் அடிகளாரைப் பொறுத்தமட்டில் முதலில் கூறிய காய்ந்து போதல்மட்டுமே பொருந்தும். ஏனைய இரண்டும் தமக்குட் பொருத்தம் என்று அவர் நினைக்கிறாரே ஒழிய அது உண்மையன்று. 495. கூடிக் கூடி உன் அடியார் குனிப்பார் சிரிப்பார் களிப்பாராய் வாடி வாடி வழி அற்றேன் வற்றல் மரம் போல் நிற்பேனோ ஊடி ஊடி உடையாயொடு கலந்து உள் உருகிப் பெருகி நெக்கு ஆடி ஆடி ஆனந்தம் - அதுவே ஆக அருள் கலந்தே 11 'கூடிக்கூடி உன் அடியார் குனிப்பார், சிரிப்பார் களிப்பாராய்’ என்பதுவரையுள்ள பகுதி, முன்னர்: குறிப்பிட்ட இறைப்பிரேமையைக் குறிப்பதாகும். உன் அடியார் பலரும் ஒன்றுகூடி, நாட்டியம் ஆடுதல் குனிப்பார்), சிரித்தல், களித்தல் ஆகிய தம்மை மறந்து செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மேலே கூறிய மூன்று செயல்களும் பொதுவா! அமைந்துள்ளன. இவர்களின் எதிரே, வற்றல் மரம்போல நான் நிற்பது எவ்விதத்திலும் பொருத்தமில்லை என்பதை அறியாயா? - ‘எங்களை ஆண்டுகொண்ட தலைவனே! உன்னோடு கலந்து ஊடியும், கூடியும் ஆனந்தத்தை அனுபவித்து மகிழ் எனக்கு அருள் செய்வாயாக' -