பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்தக் கருத்து முன்னரும் பலமுறை பேசப்பெற்றுள்ளது. இறைவனது கடமையை நினைவூட்ட விரும்பியவர்போலப் பொறுக்க வேண்டாவோ?’ என்று தொடங்கிய அடிகளார் 'பிறைசேர் சடையாய்!” என விளிப்பது, முன்னர்ப் போன்றே கருத்துடைய விளியாக அமைந்துள்ளது. அடிகளார் பிழை செய்திருப்பின் பொறி புலன்கள் காரணமாக, உலகியலிற் பட்ட பிழையாகவே அவை இருந்திருக்கும். ஆனால், சந்திரன் செய்த பிழை அவ்வாறல்லவே! தன் தலைவனைத் தக்கன் சிறுமை செய்தான் என்று அறிந்திருந்தும் அவியுணவிற்கு ஆசைப்பட்டு அவனுடைய யாகத்தில் கலந்துகொண்டான் அல்லவா? ஆணவம் காரணமாகத் தலைவனை அவமானப்படுத்திய குற்றத்தைத் தக்கன் செய்தான் என்றால், சந்திரன் அதற்கு உடந்தையாக இருந்தான் அல்லவா? அடிகளார் தம் குற்றத்தையும் சந்திரன் குற்றத்தையும் ஒப்புநோக்குகின்றார். மாபெரும் பிழை செய்த சந்திரனையே மன்னித்துத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடும் கூத்தனைப் பார்த்து, நீ செய்வது முறையோ! நான் 'பிழைத்தால் பொறுக்கவேண்டாவோ!' என்று பாடுகிறார். பிழைத்தால் பொறுக்கவேண்டியது தலைவனுடைய கடமை என்பதை நினைவூட்டிய அடிகளார், இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். ஐயா! சாதாரண உலகியலிற்கூட ஒருவரை அழைத்தால், அழைக்கப்பட்டவர் நின்று. அழைத்தவரைப் பார்த்து ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார்களே! குற்றம் குறையுடைய மனிதர்களே இச்செயலைச் செய்கின்றார்கள் என்றால் நீ இப்பொழுது என்ன செய்யவேண்டும்? 'உடையாய், உமையாள் கணவா, பிறைசேர் சடையாய்! என்றெல்லாம் உன்னை அழைத்தேனே உடையாய் என்றதால் நீ தலைவன் நான் உன் உடைமை; எனக்கு