பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 193 அருள் செய்யவேண்டியது உன் கடமை என்பதை நினைவூட்டினேன். உமையாள் 凸劣@ö「@ls了 என்று அழைத்ததால் நீ இரங்காவிட்டால் என் தாய் உன்னைச் சும்மா விடமாட்டாள் என்பதை நினைவூட்டினேன். பிறைசேர் சடையாய் என்றதால் உனக்கு மாபெரும் தவறிழைத்த சந்திரனையே மன்னித்து ஆட்கொண்டவன் நீ என்பதை நினைவூட்டினேன். இப்படியெல்லாம் நான் உன்னை அழைத்தேன் எனக்கு அருளாது ஒழிவது உன் வழக்கோ' என்றவாறு. அருளாளர்கள் பாடல்களில் இறைவனைப் பல்வேறு விதமாக விளித்துப் பாடும் இயல்பைக் காணலாம். மரபு பற்றி வரும் பாடல்கள் ஆதலின் இவ்விளிகளுக்கு ஆழ்ந்து பொருள் காணாமல் வெறும் விளிகள் என்றே பொருள் கண்டுள்ளோம். உடையாய் என்ற சொல்லும், 'உமையாள் கணவா’ என்ற தொடரும் காதில் பட்டவுடன், நம் சிந்தனை எங்கெங்கோ ஒடிச்சென்று பல கருத்துக்களையும் உள்ளடக்கியே இவ்விளிகள் தோன்றியிருக்கக்கூடும் என்ற முடிவிற்கு வரச்செய்தது. இதனையே தொல்காப்பியனார் 'இறைச்சியில் பிறக்கும் பொருளுமாருண்டே தொல்: பொருள்5.34) என்று கூறிப்போனார், - 497 அடியேன் அல்லல் எல்லாம் முன் அகல ஆண்டாய் என்று இருந்தேன் கொடி ஏர் இடையாள் கூறா எம் கோவே ஆ ஆ என்று அருளி செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு எங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணி கொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே 2 இப்பாடல் எளிய சொற்களோடு நேரிடையாகச் செல்வதுபோலக் காணப்படினும், எளிதாகப்