பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பொருள்செய்வதற்கு முடியாமலுள்ளது. இரண்டு முக்கியமான கருத்துக்கள் முதலாம் அடியிலும் மூன்றாம் அடியிலும் பேசப்பெற்றுள்ளன. முதலாம் அடியில் திருப்பெருந்துறை நிகழ்ச்சி நினைவுகூரப்பெற்றுள்ளது. அந்நிகழ்ச்சிக்கு எவ்விதத் தொடர்பும் இல்லாத ஒரு வேண்டுகோள் மூன்றாம். அடியில் இடம்பெறுகிறது. - நான்காவது அடியில் ஒரு விநோதமான வேண்டுகோள் விடப்பெறுகிறது. இனிப் பாடலின் பொருளைச் சற்று விரிவாகக் காணலாம். ‘அடியேன் அல்லலெல்லாம் அகல முன் ஆண்டாய் என்று இருந்தேன்’ என்பது திருப்பெருந்துறை நிகழ்ச்சியை நினைவுகூர்வதாகும். முன் ஆண்டாய் என்று கூறியதால் இப்பாடல் அந்நிகழ்ச்சிக்குப் பின்னர், சில காலம் கழித்துப் பாடப்பெற்றிருக்க வேண்டும். குருநாதர் பெருந்துறையில் ஆண்டுகொண்டார். ஆனால், அவ்வாறு ஆட்கொண்டபோது உன் அல்லலெல்லாம் இதனுடன் போய்விடும் என்று அவர் ஒன்றும் வாக்குத் தரவில்லை. ஆண்டபொழுது கிடைத்த இறையனுபவத்தை, ஆனந்தத்தை அனுபவித்த அடிகளார் இதன் பின்னர்த் தம்முடைய அல்லல் அனைத்தும் போய்விடும் என்று எதிர்பார்த்திருந்தார் என்று நினையவேண்டியுள்ளது. என்றிருந்தேன்’ என்ற தொடர் என்று நம்பியிருந்தேன் என்ற பொருளைத் தருவதாகும். இந்த நம்பிக்கை எவ்வாறு வந்தது? 'அகல ஆண்டாய்' என்ற தொடரில், அகல என்ற வினையெச்சம் காரண காரியப் பொருளில் வந்து, ஆண்டாய் என்ற வினைகொண்டு முடிந்தது. அதாவது 'என் அல்லல் எல்லாம் அகலுமாறு, நீ என்னை