பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 195 வந்து ஆண்டுகொண்டாய் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன்’ என்கிறார். இவ்வளவு உறுதிப்பாட்டோடு குருநாதர் ஆண்டபொழுதே தம்முடைய அல்லல் எல்லாம் அகன்றுவிட்டது என்று நம்பியிருந்த அடிகளார், இப்பொழுது "ஆ, ஆ என்றருள', 'செடிசேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? என்று பாடவேண்டிய நோக்கமென்ன? நம்பியிருந்த ஒருவர் அந்த நம்பிக்கை பழுதடைத்துவிட்டால், நம்பிக்கை உண்டாக்கியவரைக் குறைகூறலாம்; அன்றேல் நம்பிக்கைக்குத் தாம் தகுதியில்லை என்ற முடிவுக்கு வரலாம். இவை இரண்டும் தவிர வேறு வழியே இல்லை. இதனை மனத்துட் கொண்டு பார்த்தால் அல்லல் அகன்றுவிட்டது என்று நம்பியிருந்த அடிகளார், அது அகலவில்லை என்பதை இப்போது உணர்கின்றார். இப்போது என்ன செய்வது? இந்த நம்பிக்கையைத் தந்தவரைக் குறைகூறலாம்; அதற்கு அடிகளார் தயாராக இல்லை. ஆண்ட அந்த நேரத்தில் இறையனுபவம், ஆனந்தம் என்பவை உள்ளத்திற்குக் கிடைத்தன. அற்புதமான அமுத தாரைகள் எற்புத் துளைதொறும் ஏற்றப்பட்டதால் இந்த உடலும் எல்லையில்லாத, முன்பின் அனுபவித்தறியாத இன்பத்தைப் பெற்றது. ஆக, உடல், உள்ளம் இரண்டும் இந்த இன்பத்தைப் பெற்றுவிட்ட காரணத்தால் அல்லல் என்பது தமக்கு இனி இல்லை என்று அடிகளார் கருதினார். 'அல்லல் எல்லாம் அகல’ என்ற எதிர்மறை வாய்பாட்டால் கூறினும், உடன்பாட்டு வாய்பாடு விரித்துச் சொல்லப்பெறாவிடினும் குறிப்பால் பெறப்பெற்றது. அதாவது, உள்ளத்தாலும் உடலாலும் அனுபவிக்கப்பெற்ற அல்லல் எல்லாம் அகன்றது எதிர்மறை நிலை; உள்ளம் இறையனுபவமும் ஆனந்தமும்