பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 197 குருநாதர், தொண்டர்கள் என்பவர்களோடு சேர்ந்து போயிருந்தால் நீங்கிய அல்லல் திரும்பிவர வாய்ப்பேயில்லை. இது நடைபெறாமைக்கு ஒரே காரணம் இந்தப் பழைய உடல் ஆதலால் செடி சேர் உடலம் சிதையாதது எத்துக்கு? என்று இறைவனையே கேட்கின்றார். இந்த உடலத்தைப் போக்காமல் வைத்திருப்பது எதற்காக என்பது இதன் பொருளாம். (செடி-தீமை (பாவம்) நான்காவது அடியில் உடையாய்' என்று விளித்து, 'கூவிப் பணிகொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே” என்று பேசுவது ஆழ்ந்த சிந்தனைக்குரியது. இதற்கு உண்மையான பொருள் காண வேண்டுமாயின் ஆங்கிலக் கவிஞன் மில்ட்டனுடைய பாடலின் ஒர் அடியை நினைவில் கொள்வது நலம். ‘வெளியே காத்து நிற்பவர்களும் உன் பணியையே செய்கின்றார்கள்’ (They also serve who stand and wait) orcărugm(5th offg, oyu). Lou சமயங்களில் உயர்ந்த நோக்கத்தோடு சில செயல்கள் செய்யப்பெறுகின்றன. மேலாகப் பார்ப்பதற்கு அவை சரியான செயல்களல்ல என்று தோன்றினாலும், விளைக்கவேண்டிய பயனை ஒட்டியே அந்தச் செயல்களை நல்லனவென்றோ தீயனவென்றோ கொள்ளவேண்டும். திருஞானசம்பந்தர் தேவாரத்தில் மூன்றாம் திருமுறை 103ஆம் பதிகத்தின் முதலாம் பாடலில் வரும் அற்றம் மறைப்பதும் உன் பணியே’ என்ற தொடருக்கு வாலாயமாகப் பொருள் கூறுபவர்கள், கோவணமாக நின்று உன் மானத்தைக் காப்பது பாம்பேயாகும் என்று பொருள் கூறியுள்ளனர். இங்கு அற்றம் என்ற சொல்லுக்கு மானம் என்று பொருள் கொண்டு இவ்வாறு பொருள் கூறி உள்ளனர். அற்றம் என்ற சொல்லுக்கு உண்மை என்ற பொருளும் உண்டு. பிறர், துயரெய்தாமல் இருக்க, சில சமயங்களில், உண்மையை மறைக்கவேண்டிய சூழ்நிலையும்