பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ஏற்படலாம். உண்மையை மறைத்தல், என்றால் பொய் கூறுதல் என்று பொருளன்று. அப்பூதியடிகள் இப்போது இங்கு அவன் உதவான் (பெ.பு: அப்பூதி-32) என்று கூறியது அற்றம் மறைப்பது ஆகும். இவ்வாறு மறைப்பதும் இறைவன் பணியேயாகும் என்ற கருத்தைப் பெறவைக்கவே 'அற்றம் மறைப்பதும் உன்பணியே’ என்றார் காழிப்பிள்ளையார். இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு கூவிப் பணி கொள்ளாது ஒறுத்தால் ஒன்றும் போதுமே” என்ற தொடருக்குச் சற்று விரிவாகப் பொருள் செய்தல் நலம். 'உடையாய்' என்று தொடங்கி ஒறுத்தால் ஒன்றும் போதுமே” என்று முடிக்கின்றார் என்பதை மனத்துட் கொள்ள வேண்டும். உடையவனுக்கு உடைமையிடத்துச் சகல உரிமைகளும் உண்டு. அதை நினைவூட்டி இப்பொழுது அடிகளார் பேசுகின்றார். உடையவனே! உடைமையாகிய என்னைப் கூவிப் பணிகொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய நீ விரும்பவில்லையாயின் என்னைத் தண்டித்தால்கூடப் போதும். ‘என்னைக் கூவிப் பணிகொண்டாலும் ஒறுத்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன். இந்த இரண்டனுள் எதை நீ செய்யினும் நான் உன் நேரடிக் கவனத்தில் உள்ளேன் என்பதால் நீ என்னைத் தண்டித்தால்கூட, அதுவே எனக்குப் போதுமானதாகும் என்கிறார் அடிகளார். 498. ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை இன்றே இன்றிப் போய்த்தோ தான் ஏழை பங்கா எம் கோவே குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே நீ கொண்டால் என்தான் கெட்டது இரங்கிடாய் எண்தோள் முக்கண் எம்மானே 3