பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 199 இப்பாடலிலும் முன்னைய பாடல்களைப்போல, திருப்பெருந்துறை நிகழ்ச்சியே அடிகளார் மனத்தை நிறைத்து நிற்பதைக் காணலாம். ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை' என்பதில் ஒரு நயம் அமைந்துள்ளது. ஒன்றுக்கும் உதவாத நாய் போன்றவனாகிய என்னை என்று அடிகளார் கூறுவதால், தம்மைப்பற்றித் தமக்கே தெரிந்திருக்கும்பொழுது, ஆட்கொண்டவனுக்கு அது எப்படித் தெரியாமல் போயிருக்கும் என்ற கருத்தைப் பெறவைக்கிறார். தம்மை இன்னாரென்று அறிந்திருந்தும், அதாவது ஒன்றுக்கும் உதவாத நாய்போன்றவன் என்று அறிந்திருந்தும், குருநாதர் உய்யக் கொண்டார் என்றால், அச்செயல் எந்தரமும் ஆட்கொள்ளும் அவர் கருணையின்பாற்பட்டதே என்பதை அறிவிக்கவே உய்யக் கொண்ட நின் கருணை’ என்றார். அப்படி, தரம் பாராமல் ஆட்கொண்ட அவர் கருணை, தம்மைப் பொறுத்தவரை இன்று இல்லாமல் எங்கே போய்விட்டது என்ற வினாவை எழுப்புகின்றார். இந்த வினாவை எழுப்பிய பிறகு, அடிகளார் உள்ளத்தில் சில தடை, விடைகள் தோன்றியிருக்க வேண்டும். கருணை, இன்று எங்கே போய்விட்டதோ? என்ற அடிகளாரின் வினாவிற்கு, நாம் ஆட்கொண்ட போது நீ இருந்த நிலையைவிட, மிகவும் கீழான நிலைக்குச் சென்று, பல குற்றங்களைச் செய்துவிட்டாய். ஆதலால் உன்மீது முன்போலக் கருணை பொழிய வாய்ப்பில்லை’ என்று குருநாதர் தடை எழுப்பியதாக மனத்துட் கொண்டு, அந்தத் தடைக்கு விடை கூறுவார்போல மூன்றாவது அடியைப் பாடுகிறார். "குன்றே அனைய குற்றங்கள் குணமாம் என்றே நீ கொண்டால்' என்பதில் கொண்டால் என்ற சொல்லுக்குப் பின்வருமாறு பொருள் கொள்ளலாம். 'என் குற்றங்களைக் குற்றம் என்றே கருதி, ஒன்று, இரண்டு என்று கணக்கிட்டு