பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இந்தக் குற்றங்கள் மலைபோல் வளர்ந்துவிட்டன. இருந்தாலும் அருள் காரணமாக உன்னை மன்னிக்கிறேன் என்றும் நீ கூறலாம். ஐயா! அதைவிட எளிய வழியொன்றுண்டு. இந்த மலைபோன்ற குற்றங்களைக், குற்றம் என்று பெயரிட்டுச் சேர்த்துக்கொண்டே செல்லாமல், ஒவ்வொரு குற்றத்தையும் ஒவ்வொரு குணம் என்றே ஏற்றுக்கொண்டால் கெட்டா போய்விடும்? என்றவாறு. ‘என்தான் கெட்டது? என்பதைச் சிந்திப்பது நலம். இதுவரை, கருணையைப் பெருங்கடல் என்று பல இடங்களில் உருவகித்துப் பாடியுள்ளார். குற்றங்கள் குன்றுபோல் இருப்பினும் அவை கடலுக்குள் புகும்பொழுது தம்முடைய தனித்தன்மையை இழந்து கடலுக்குள் ஐக்கியமாகிவிடும். குன்று உட்புகுவதால் கடலின் தன்மைக்கு எவ்வித மாசுமில்லை. ஆகவே, எத்தனை குற்றங்கள் செய்யினும் அவற்றைக் குணம் என்றே கருதி, உடையவன் ஏற்றுக்கொண்டால் அவனுடைய கருணைக்கு எவ்விதப் பங்கமும் வராது என்பதை மிகச் சாதுரியமாக ‘என்தான் கெட்டது என்று பேசுகிறார் அடிகளார். இப்பொழுது இறைவன் மற்றொரு வினாவை எழுப்பலாம் அல்லவா? குற்றம் என்பதும் குணம் என்பதும் ஒன்றுக்கொன்று மாறுபட்டுத் தனியே நிற்பவை. அவற்றை எப்படி ஒன்றை மற்றொன்றாகக் கொள்ள முடியும் என்று தோன்றக்கூடிய வினாவை ஆசங்கித்து (எதிர்பார்த்து) இரங்கிடாய் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம், அதற்கு விடை கூறுகிறார். அதன் விளக்கம் வருமாறு. "ஐயா! நீ சொல்வது உண்மைதான். குற்றம் வேறு; குணம் வேறுதான். குற்றத்தைக் குணமாகக் காண்பதற்கு ஒரு எளிய வழியுண்டு. அற்ப உயிராகிய என்மாட்டு நீ கொண்டுள்ள