பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 201 பேரிரக்கம் என்ற போர்வையால் என் குற்றங்களை மூடினால், அவை குணமாகவே மாறிவிடும். எனவே, குன்றே அனைய குற்றத்தைக் குணம் என்று நீ கொள்வதற்கு ஒரே வழி என்மாட்டு இரங்குதலைச் செய்தலே ஆகும். இரங்கிடாய் என்ற வேண்டுகோளின் பொருள் இதுவேயாகும். 499. மான் நேர் நோக்கி மணவாளா மன்னே நின் சீர் மறப்பித்து இவ் ஊனே புக என்தனை நூக்கி உழலப் பண்ணுவித்திட்டாய் ஆனால் அடியேன் அறியாமை அறிந்து நீயே அருள் செய்து கோனே கூவிக்கொள்ளும் நாள் என்று என்று உன்னைக் கூறுவதே 4 இப்பாடலுக்கு வாலாயமாகக் கூறும் பொருள் முறையை விட்டுப் புதிய பொருள் காணலாமோ என்று தோன்றுகிறது. இவ்வாறு நினைப்பதற்குக் காரணம் அருளாளர்கள் அருளிய சில பாடல்களே ஆகும். துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய் (திருமுறை 2-98-5) என்று காழிப் பிள்ளையாரும், கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்துடையேன் (திருமுறை; 4-94-6) தி.சி.சி.IV 14