பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கருவுற்ற நாள்முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என்உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் (திருமுறை: 4-99-6) என்று நாவரசர் பெருமானும் பாடியுள்ளனர். தம்பியின் போக்கைக் கண்டு வருந்திய திலகவதியாருக்கு வீரட்டப்பெருமான், கனவிடைத் தோன்றி ‘முன்னமே முனியாகி நம்மை அடையத் தவம் முயன்றான்” (பெ.பு:திருநாவு-48) என்று கூறியதாகச் சேக்கிழார் பெருமான் நாவரசர் புராணத்தில் கூறுகின்றார். இப்பெருமக்கள் இப்பிறவியில் நம்மைப்போலப் பருஉடம்புடன் வாழ்ந்தாலும், தேவை ஏற்படும்போது தங்களுடைய பழமையை நினைவிற்கொண்டு, பாடியுள்ளதைக் காண்கிறோம் இந்த அடிப்படையை மனத்துட்கொண்டு பார்த்தால் திருவாசகத்தின் இப்பாடலின் முதற்பகுதி புதிய சிந்தனையைத் துரண்டுகிறது. மானேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ் ஊனே புக, என்தனை நூக்கி உழலப் பண்ணுவித்திட்டாய் என்ற பகுதியில் மூன்று செய்திகள் பேசப்பெறுகின்றன. சீர் மறப்பித்தல் முதலாவது செய்தி; என்தனை இவ் ஊனே புக நூக்குதல் (அழுத்துதல்) என்பது இரண்டாவது செய்தி; உழலப் பண்ணுவித்திட்ட்ாய் என்பது மூன்றாவது செய்தி. என்தனை என்று கூறியதால் அடிகளார் தம்மைத்தான் குறிப்பிடுகிறார் என்பது வெளிப்படை 'பண்ணு வித்திட்டாய்” என்ற பயனிலைக்கு ஏற்ப மணவாளா! மன்னே!’ என்பவை எழுவாயாக நிற்கும். நின் சீர் பாடிக்கொண்டிருந்த என்னை, அதனை மறக்குமாறு செய்தாய் என்றும், எங்கோ இருந்த என்னைத்