பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 203 திருவாதவூரன் என்ற உடம்பினுள் நூக்கினாய் என்றும், எல்லையில்லாத துன்பங்களின் இடையே உழலுமாறு செய்தாய் என்றும் இவ்வளவு அழுத்தந் திருத்தமாகக் கூறுவதால் இப்பகுதி அடிகளாரின் இப்பிறப்பிற்கு முற்பட்ட நிலைபற்றிப் பேசுவதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. காழிப் பிள்ளையார் திருந்தடி மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின்மேல் பிறக்குமாறு காட்டினாய்’ என்று பாடுகிறார். அதாவது திருவடி தியானத்திலேயே ஆழ்ந்திருந்த அவருடைய முந்தைய நிலையை மாற்றி, மண்ணிடைப் பிறக்குமாறு செய்தான். பிறவியை வேண்டாதிருந்த அவரை, மையல் செய்து மண்ணிடைப் பிறக்குமாறு செய்தான். தவிர, இம்மண்ணின்மேல் பிறக்கும்போதேகட அந்தப் பழைய நினைவோடேயே பிறக்கச்செய்தான் என்று பாடியுள்ளார். இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்துகொண்ட சேக்கிழார் பெருமான், சீகாழிக் குளக்கரையில் பிள்ளையார் ஏன் அழுதார் என்று கூறவரும்போது தம் மேலைச் சார்பு உணர்ந்தோ சாரும் பிள்ளைமைதானோ' (Oւ.ւկ: திருஞான-63) அழுகைக்குக் காரணம் என்கிறார். தம் மேலைச் சார்பு என்பது துறக்குமா சொலப்படாய்” என்ற பாடலின் நுணுக்க зр_6 огтшт85 அமைந்துள்ளதைக் காணலாம். - - அடிகளார். "சீர் மறப்பித்து என்று பாடுவதால் இறைவன் சீர் பாடிக்கொண்டிருந்த இவருடைய பழைய நிலையை மாற்றி, அந்த ஆன்மாவை நிலவுலகிற்கு அனுப்பும்போது இரண்டு காரியங்களைச் செய்தான் பெருமான் என்ற கருத்துப்படப் பாடுகிறார். ஒன்று, சீர்பாடும் இயல்பை மறப்பித்தான். இரண்டாவது திருவாதவூரன் என்ற உடலில் அந்த ஆன்மாவை நூக்கினான். . . -