பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 ಟ್ಲಿ நிலைமையில் பிறந்த ஒருவர், ஏனைய மக்களைப்போல பிறவித் துன்பத்திலும், உலகியற் துன்பத்திலும் உழலவேண்டிய தேவையில்லை. ஆனால், அதிலும் உழலுமாறு செய்துவிட்டான் என்று பாடுகிறார் அடிகளார். இதுவரை திருவாதவூரர் வரலாற்றைக் கறும் புராணங்களில் கூறப்படாத ஒர் உண்மையை இப்பாடல் அறிவிக்கிறதோ என்ற ஐயம் தோன்றுகிறது. இதுபற்றி மேலும் சிந்திப்பது நலம். மேலே கூறிய இரண்டு அடிகளுக்கு ஏற்ப அப்பொருளைத் தொடர்வதானால் பின்வருமாறு பொருள் கூறலாம். கோனே! என்னுடைய அறியாமையை நீ நன்றாக அறிந்திருக்க வேண்டும். காரணம், ர்ே மறப்பித்தவனும் பிறவியில் நூக்கியவனும் நீயேயாதலால் என் அறியாமையை நீ நன்கு அறிந்திருப்பாய் அல்லவா? அதை இப்பொழுது உன் நினைவிற்குக் கொண்டு வருகிறேன். இப்பொழுது பழைய உறவைப் புதுப்பிக்கும் முறையில் நீ என்னைக் கூவி அழைத்துக்கொள்ளும் நாள் வந்துவிட்டது. தம்மானை அறியாத சாதியார் போலவும் தாய் தன்னை அறியாத கன்று போலவும், உன்னை இனங்கண்டுகொள்ளாமல் அலமருகின்றேன். நீயாகப் பார்த்து என்னைக் கூவிக்கொள்ளும் நாள் என்றைக்கு வரும்? அப்படி நீ என்னைக் கூவிக்கொள்ளும்போது, உன் இணையடியில் கலந்து, நான் மறந்துபோன உன் சீரை மறுபடியும் புகழும் வாய்ப்பு என்று வருமோ என்று ஏக்கறுகின்றேன்’ என்றவாறு. 500. கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ தேறும் வகை நீ திகைப்பும் நீ தீமை நன்மை முழுதும் நீ