பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

婆 குழைத்த பத்து 205 வேறு ஒர் பரிசு இங்கு ஒன்று இல்லை மெய்ம்மை உன்னை விரித்து உரைக்கின் தேறும் வகை என் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண்டாவோ 5 இப்பாடல், முன்னரும் பல இடங்களில் அடிகளார் கூறிய கருத்தை வலியுறுத்துவதாய் அமைந்துள்ளது. பல்வேறு வடிவமும், தோற்றமும், வேறுபாடுகளும் உடைய பொருள்களால் நிறைந்துள்ள இப்பிரபஞ்சத்தை நோக்குவார்க்கு இவற்றிடையே காணப்பெறும் வேறுபாடே பெரிதாகக் காட்சியளிக்கும். வேறுபாடுகளுடன் காணப் பெறும் பொருள்களை எடுத்துக்கொண்டு ஆராயத் தொடங்கினால், வடிவம், உருவம், செயற்பாடு ஆகிய வேறுபாடுகளைக் களைந்து, மெய்ம்மையாகப் பொருள்களைக் காண முற்பட்டால், இவை அனைத்தும் அணு என்ற ஒன்றின் பல்வேறு வகையான சேர்க்கை என்று அறியமுடியும். அவன், அவள், அது என்ற மூன்று சொற்களாலும் சுட்டப்படும் பொருள் ஒன்றேதான். அந்த ஒரு பொருளை விரித்து உரைக்கத் தொடங்கினால் அதுபற்றிப் பேசும் நாவும், ஏனைய மனம், மெய் முதலிய கருவிகளும், அவற்றை ஆட்டிப்படைக்கும் கரணங்களும், எல்லாம் அந்த ஒரே பொருளின் பல்வகை விரிவுகள் என்பதை அறியமுடியும். இவற்றோடு மிக நுண்மையானதும், நாமேகூட வேறு பிரித்துக் காணக்கூடியதுமான நன்மை தீமை போன்ற பண்புகளும் அதே பொருள்தான். மாறுபாடுடைய பொருள்களைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்குகையில் பொருள்களிடையே காணப்படும் கோடிக் கணக்கான மாறுபாடுகள் நமக்குத் திகைப்பை