பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உண்டாக்குகின்றன. இந்தத் திகைப்பைக் கண்டு அஞ்சவேண்டிய தேவையில்லை. திகைப்புத் தோன்றுவதே தெளிவைப் பெறுவதற்கு வழியாதலின், அந்தத் திகைப்பையும் அவன் என்றார். அந்தத் திகைப்பினுாடே, மெள்ள மெள்ளச் சிந்திக்கத் தொடங்கி, இதுதான் முடிந்த பொருள் என்பதைக் காணும் தெளிவு பிறக்கிறதல்லவா? எனவே, ஆராயும் வகையும் அதன் முடிவும் அவனே என்பார் தேறும் வகை நீ என்றார். ஆய்ந்து பார்த்த அளவில் நா முதலிய கருவிகளும், அவற்றால் பேசப்பெறும் பொருளும், தெளிவு-திகைப்பு என்றும் நன்மை-தீமை என்றும் முரண்பட்ட சொற்களால் குறிக்கப்படுவதும் ஆகிய அந்தப் பொருள் ஒன்றேதான். ஒரு பொருள் என்று எண்ணிவிட்ட பிறகு, அடுத்த பொருள் என்று எண்ணுவதற்கு அந்த ஒரு பொருளை அன்றி வேறு இல்லை. காணப்படும் பொருள்களின் வடிவு, உருவம், தன்மை, இயல்பு ஆகிய அனைத்து வேறுபாடுகளிலும் புகுந்து நிற்பது இந்த ஒரே பொருளாதலின், இந்தப் பொருளைத் தவிர, வேறோர் பரிசு இங்கு ஒன்று இல்லை என்றார். 'சிவலோகனே! யான் கடைத்தேறும் வழிதான் என்ன? மாறுபாடுகளைக் கடந்து நீ ஒருவனே உள்ளாய் என்பதை என் அறிவு சுட்டுகிறது. என்றாலும், மனத்தாலும் சித்தத்தாலும் இந்த உண்மையைத் தேறி, உன்னிடம் அடைக்கலம் புகவேண்டும் என்ற முடிவிற்கு வந்தாலும், அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றேன். ‘வழியோடு சென்ற என்னை இழுத்துப் பிடித்து ஆட்கொண்ட உனக்கு, ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். என் உள்ளத்திடை ஏற்பட்டுள்ள இத்திகைப்பை நீக்கி, என்னைத் தேற்ற வேண்டிய கடமை