பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழைத்த பத்து 207 நின்பாலுள்ளது என்பதை விண்ணப்பித்துக் கொள்கிறேன்’ என்கிறார். 501. வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன் மாற்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில் அதுவும் உன்தன் விருப்பு அன்றே 6 மனித மனத்தின் சில விநோதமான கூறுபாடுகள் இப்பாடலில் விரிவாகப் பேசப்பெற்றுள்ளன. மனம் ஒன்றை அவாவி நின்றால், எல்லா அவாவிற்கும் தருக்க ரீதியாகக் காரணம் கூறுதல் இயலாது. பல சமயங்களில் அப்பொருளை இப்பொழுது பெற்றால் அது பின்னர்த் தீமை பயக்கும் என்று அறிந்தும்கூட, உடனடியாக ஏற்படும் இன்பத்திற்காக அதனை விரும்பி ஏற்பது மனித மனத்தின் இயல்புகளில் ஒன்று. நீரிழிவு நோயாளி இளிைப்புப் பண்டம் தனக்குத் தீமை பயக்குமென்று அறிந்திருந்தும், அதனைத் தேடி உண்ணுதல் இன்றும் நாம் காண்கின்ற ஒரு காட்சியாகும். தீமை பயக்கும் என்று தெரிந்திருந்தும் ஆசை காரணமாகச் செய்யப்படும் தவறாகும் இது. இதையல்லாமல் மற்றொரு வகையும் உண்டு. பொருளின்மேற் கொண்ட ஆசை, தீமை பயக்குமா, நன்மை பயக்குமா என்று பாகுபடுத்தி உணரமுடியாத குழந்தை நிலையாகும் அது பளபள என்றிருக்கும் சவரப் பிளேடை தன் கையில் பெறவேண்டும் என்று குழந்தை பிடிவாதம் பிடிக்கிறது. ஆனால், அது கையில்