பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கிடைத்தவுடன் உள்ளங்கையில் Η 16ί) காயங்கள் ஏற்பட்டுவிடும். குழந்தைக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது. எனவே, பெரியவர்கள் குழந்தை எவ்வளவு அழுதாலும் அதன் கையில் இதனைத் தாரார். குழந்தையிடம் கொடுக்கக்கூடியது எது, கொடுக்கக் கூடாதது எது என்பதை அறிவு முதிர்ந்த பெரியோர்கள் நன்கு அறிவர். இந்தக் கருத்தைத்தான் வேண்டத் தக்கது அறிவோய் நீ என்றார். அடுத்து உள்ளது வேண்ட முழுதும் தருவோய் நீ என்பதாகும். இதில் வரும் முழுதும் என்ற சொல் மிகப் பரந்துபட்ட பொருளைத் தந்துநிற்கின்றது. பின்னர்த் தீமை பயக்கும் என்பதை அறிந்தோ அறியாமலோ இப்பொழுது மிக்க அழுத்தத்துடன் ஒன்றை வேண்டினால் அதனையும் இறைவன் தருவான் என்று பொருள் செய்யவும் இதில் இடமுள்ளது. முற்றறிவினன் ஆகிய இறைவன், பின்னர்த் தீமை பயக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தும் ஏன் அதனைத் தருகிறான் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது, தொடக்கத்தில் ஒன்றை மகிழ்ச்சியுடன் அனுபவித்து, பின்னர் அது தீமை பயப்பதை அறிகிறான். அப்படி அறியும்போது அனுபவமும் விரிவடைந்து, இனி ஒன்றை வேண்டும்போது இத்தகைய தவற்றைச் செய்யக்கூடாது என்ற அனுபவத்தைப் பெறுவதற்கு இது உதவுகிறது. இரண்டாவது, மிக நுணுக்கமான ஒன்றாகும். தீமையை அனுபவிக்கவேண்டிய வினை உந்துமேயானால், தீமையை விளைக்கும் அப்பொருளை மனம் நாடச் செய்யும். இறைவனும் அப்பொருளைப் பெறுமாறு செய்கிறான். இதனால் பெறும் அனுபவம், அறிவு விசாலத்தைத் தருவதுடன் வினை அனுபவித்து அழிவதையும் செய்கிறது.